பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

சேரன்-செங்குட்டுவன்

களும் கலந்தெதிர்த்த அப்போர்க்களத்தில் பூமிதெரியாம லெழுந்த புழுதியானது, யானைக்கழுத்திற் கட்டிய மணிகளின் நாக்களிலும் கொடிகளிற்கட்டிய சங்குகளின் நாக்களிலும் புகுந்து அவற்றை ஒலிக்காவண்ணஞ் செய்துவிட்டன. தூசிப்படைகள் தம்மிற் கலந்து புரிந்த அப்போரிலே தோளுந் தலையுந் துணிபட்டு வேறாகிய வீரரது உடற்கும்பலிற் றுள்ளியெழுந்த குறையுடலாகிய கவந்தங்கள், பேயினது தாளத்துக்கொப்பக் கூத்தாடின. அப்பிணக்குவியலினின்று வழிந்தோடும் ஊன்கலந்த குருதியிலே, கூட்டங்கொண்ட பேய்மகளிரது நாக்களெல்லாம் ஆடலாயின. இங்ஙனம் ஆரியவரசரது சேனாவீரரை அக்களத்தே கொன்றுகுவித்து அவரது தேர்யானை குதிரைகளில் ஆட்களில்லையாகக்கொன்று[1] நூழிலாட்டிய சேரன்-செங்குட்டுவன், எருமையூர்தியுடைய கூற்றுவன், உயிர்த்தொகுதியை ஒரே பொழுதினுள் உண்ண வல்லவன் என்பதை அறிவித்துத் தும்பை சூடி விளங்கினான். இவனது சினவலையின்கண்ணே, தம் நாவைக்காவாது தமிழரசரையிகழ்ந்த கனகவிசயருடன் தேர்வீரர் ஐம்பத்திருவர் அகப்பட்டுக்கொண்டனர். மற்றப் பகைவர்களோ தத்தம் ஆயுதங்களை எறிந்துவிட்டுச் சடை, காஷாயவுடை, சாம்பல் இவற்றைத் தரித்த சந்நியாசிகளாகவும் பீலி கைக்கொண்ட சைநமுனிவராகவும், பாடகராகவும், பற்பல வாத்தியகாரராகவும், ஆடுவோராகவும் தாந்தாம்வல்ல துறைக்கேற்ற வேடம் பூண்டு வேண்டுமிடங்களிலே பதுங்கியொளித்தனர். இவ்வாறு வடவரசர்கள் நடுநடுங்கும்படி, களிறுகளே எருதாகவும், வாளே பிடிக்குங்கோலாகவும், பகைவர்சேனைகளே


  1. நூழில் - வீரக்கழன் மன்னர் சேனையைக்கொன்று அழலும் வேலைத்திரித்து விளையாடுதலைவிரும்பல் என்பர்.