பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

சேரன் - செங்குட்டுவன்

வீற்றிருக்கும்போது, மாடலன் என்னும் மறையவன் ஆங்கு எதிர்பாராதே வந்து நின்று அரசனை ஆசிகூறிவாழ்த்தி விட்டு ‘எங்கோவே! மாதவியென்னும் நாடகக்கணிகையின் கடற்கரைப்பாடலானது, கனகவிசயரது முடித்தலைகளை இங்ஙனம் நெரித்து விட்டது; இது வியக்கத்தக்கதாம்’ என்று ஒரு வார்த்தையைக் கூறினான். இதனைக்கேட்ட செங்குட்டுவன் அவன் கருத்தை அறியாதவனாய், ‘நான்மறையாளனே! பகைப்புலத்தரசரும் அறிந்திராத நகைச்சொல்லொன்றை இங்குவந்து திடீரெனக் கூறினை; நீ சொன்ன உரைப்பொருள் யாது? விளங்கச்சொல்லுக’ என்றான் ; எனலும் அம் மறையவன் சொல்லலுற்றான்.

“குடவர்கோவே! காவிரிப்பூம்பட்டினத்தில் நிகழ்ந்த கடல்விளையாட்டிற்குத் தன் காதலனாகிய கோவலனுடன் சென்றிருந்த மாதவியென்னும் நாடகக்கணிகை கருத்துவேறுபடப் பாடிய கானல்வரிப்பாட்டுடன் ஊழ்வினையும் உடன் சேர்ந்துருத்தமையால் கோவலன் அக்கணிகையை வெறுத்துப்பிரிந்து, தன் மனைவி கண்ணகியை உடனழைத்துக்கொண்டு மதுரைமாநகரம் புகுந்தான்; புகுந்தவன், அந்நகரத்தரசனான பாண்டியன் உயிர்நீத்து விண்ணுலகடையும்படி கொலையுண்டன னன்றோ. அங்ஙனங் கொலையுண்ட கோவலன் கற்புடைமனைவியானவள் உன் நாட்டை அடைந்தமையாலன்றோ, அப்பத்தினி இப்போது வடதிசையரசருடைய மணிமுடியிலேறி விளங்குவாளாயினள்” என்று, முன்னிகழ்ந்த கோவலன் சரிதத்தைச் சுருங்கக்கூறிப் பின்னும், செங்குட்டுவனை நோக்கி, ‘வேந்தர்வேந்தே! யான் ஈண்டு வருதற்கு அமைந்த காரணத்தையும் கேட்பாயாக; அகத்திய