பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடநாட்டியாத்திரை

71

வாழ்க’ என்று அம்மாடலமறையோன் முன்னிகழ்ந்தவையெல்லாம் விளங்கச் செங்குட்டுவனுக்குக் கூறிமுடித்தனன்.

இவற்றைக் கேட்டிருந்த அவ்வஞ்சி வேந்தன் ‘நான் மறையாள! பாண்டியன் தான் புரிந்த கொடுங்கோன்மையை நினைந்து உயிர் நீத்த பின்னர் அப்பாண்டி நாட்டில் நிகழ்ந்த விசேடம் என்னை?’ என்று உசாவினான். மாடலனும் அரசனை நோக்கி, ‘சோழர் குடிக்குரிய தாயத்தாரொன்பதின்மர் தம்மிலொன்று கூடி நின்மைத்துனச் சோழனாகிய கிள்ளியோடு பகைத்து அவனது இளவரசியலையேற்று ஏவல்கேளாது சோணாட்டைப் பெரிதும் அலைத்துவந்த காலையில், அவ்வொன்பதின்மருடனும் பொருது ஒருபகலில் அவர்களை யழித்து மைத்துனனது ஆஞ்ஞாசக்கரத்தை ஒருவழியில் நிறு வியவனும், பழையன்மாறனது காவன்மரமாகிய வேம்பை அடியோடு அழித்து வென்றவனும், போந்தைக்கண்ணியுடையவனுமாகிய பொறையனே! கேட்டருள்க; கொற்கைநகரத்தே இளவரசாய் விளங்கிய வெற்றிவேற்செழியன் என்பவன் தன்னாட்டுக்கு நேர்ந்த விபத்தையறிந்து பெருஞ்சினங்கொண்டு, ஒருமுலை குறைத்த திருமாபத்தினியாகிய கண்ணகிக்குப் பொற்கொல்லர் ஆயிரவரைப் பலியிடுவித்துப் பின், தன் அரசனை இழந்துவருந்தும் மதுரை மூதூரில் தென்னாடாட்சிக்குரியதாய்த் தொன்றுதொட்டுவருஞ் சிங்காதனத்தே, தெய்வத்தன்மைவாய்ந்த ஒற்றையாழியந்தேர்மேற் காலைச் செங்கதிர்க்கடவுள் ஏறி விளங்கியவாறு போல, சந்திரவமிசத்தோனாகிய அவ் விளஞ்செழியன் ஏறி விளங்குவானாயினன்; அரசே! வாழ்க’ என்று முடித்தான். கங்கைக்கரைப் பாடியிலே செங்குட்டுவன் இவற்றையெல்லாம் நெடுநாட்களுக்-