பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடநாட்டியாத்திரை.

75

காக்கும் கோவலர்கள், குளிர்ந்த ஆன்பொருநையாற்றில் நீராடு மகளிரால் விடப்பட்ட வண்ணமுஞ்சுண்ணமும் மலரும் பரந்து இந்திரவிற்போல் விளங்குகின்ற பெரிய துறையருகிலுள்ள தாழைமரங்களின் மேல் இருந்து கொண்டு தம் பசுக்களை அப் பெருந்துறையிற் படியவிட்டுத் தாமரைகுவளை முதலிய பூக்களைத் தலையிற் சூடியவராய் ‘ஆனிரைகளே ! வில்லவனாகிய நம் வேந்தன் வந்தனன்; அவன் இமயப்பக்கத் தினின்று கொணர்ந்த பெருத்த பசுநிரைகளோடு நீரும் நாளைச் சேர்ந்து மகிழக்கடவீர்’ என்னுங் கருத்துப்பட ஊதும் ஆயரது வேய்ங்குழலோசையும், வெண்டிரைகளால் மோதப்பட்ட கடற்கரைக்கழிகளின் பக்கத்துள்ள புன்னைக்கீழ் வலம் புரிச்சங்கமீன்ற முத்துக்களே கழங்காக நெய்தனில மகளிர் தங்கைகளில் ஏந்திக்கொண்டு, நெடுநாட்பிரிந்த நம்மரசியோடு கூடிமகிழும்படி வானவனாகிய நம் வேந்தன் வெற்றியோடும் மீண்டனன்; அவன் சூடிய தும்பையையும் பனம் பூவையும் வஞ்சிநகரையும், நங்கைமீர் ! நாம் பாடுவோமாக’ என்று நுளைச்சியர் பாடிய இனிய பாடல்களுமாக நால்வகை நிலங்களினின்றும் எழுந்த இன்னிசைகளைக் கூர்ந்து கவனித்துக்கொண்டு உறங்காதிருந்த கோப்பெருந்தேவியானவள், தன் கைவளைகளைச் செறித்தணிந்து கொள்ளவும், நகரில் வலம் புரிச்சங்கங்கள் வலமாகவெழுந்து முழங்கவும், செங்குட்டுவன் முத்துமாலைகளமைந்த வெண்கொற்றக்குடையின் கீழ் வாகையணிந்த சென்னியோடும் தன் பட்டத்தியானையின் மேல் விளங்கியவனாய், குஞ்சரங்கள் பூட்டிய இரதங்களுடன் கோநகர் முழுதும் வந்தெதிர்கொள்ள வஞ்சிமூதூரிற் பிரவேசஞ்செய்து தன் கோயிலை அடைவானாயினன்.