பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஸ்ரீ
முகவுரை

சேரன் - செங்குட்டுவனைப்பற்றி முன்னூல்களிற்கண்ட விஷயங்களை, நவீநமுறையில் ஆராய்ந்து ஒரு சரித்திரமாகத் தொகுத்தெழுதவேண்டும் என்பது எனது நெடுநாளவா ஆகும். இச்சேரனை நான் எடுத்துக்கொண்டதற்கு இரண்டு காரணங்கள் உண்டு ; முதலாவது— பண்டைத் தமிழ்வேந்தருள்ளே இவன் பெருமை பெற்றவனாதலோடு, ஏனைத் தமிழரசரினும் இவனது வரலாறு சிறிது அதிகமாகவும் காணப்பட்டது. இரண்டாவது—என்னாராய்ச்சியிற்கண்ட சிலகருத் துக்களை வெளியிடுதற்கு இவன்சரித்திரமே ஏற்றதாயிருந்ததாகும். இவ்விருவகையாலும் நிகழ்ந்த என் சிறுவிருப்பத்தை இப்போது கைகூட்டுவித்த திருவருளைச்சிந்தித்து வந்திக்கின்றேன். இவ்வாராய்ச்சிக்குச் செங்குட்டுவனைப்பற்றிய சிலப்பதிகாரவஞ்சிக்காண்டம், சிறந்த கருவியாயிற்று. அடியார்க்குநல்லாருரை இப்பகுதிக்குக் கிடையாதது விசனிக்கத்தக்கதாயினும், அவர்க்கும் முற்பட்ட அரும்பதவுரை யொன்று வெளிவந்திருப்பது ஒருவாறு மகிழத்தக்கதே. இவ் வரும்பதவுரையைப் பெரும்பான்மை தழுவி, அக்காண்டத்தின் செய்யுணடையை இயன்றவளவில் உரைநடைப்படுத்த லானேன். செந்தமிழ்வளஞ் செறிந்துள்ள இளங்கோவடிகளது “பழுதற்ற முத்தமிழின் பாடற் குரையின் - றெழுதத் தொடங்கினேன்” இல்லையாயினும், அவ்வடிகளது அரும்-