பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6-ம் அதிகாரம் :—
செங்குட்டுவன்
பத்தினிக்கடவுளைப் பிரதிஷ்டித்தல்.

5. நடுகற்காதை.



தண்மதி போன்றதும் பொன்னாலாகியதுமான வெண் கொற்றக்குடையால் மண்ணகத்தைக் குளிர்வித்த நிலந்தரு திருவினெடியோனாகிய செங்குட்டுவன், விஜயம் விளங்கும் அவ் வஞ்சிமாநகரிற் புகுந்தபின்னர், மகளிரெல்லாங்கூடி மலர்களைப் பலியாகத் தூவித் திருவிளக்குகளைக்கொணர்ந்து நின்று ‘உலகமன்னனாகிய நம்மரசன் நீடுவாழ்க’ என்றேத்தும்படி, மாலைக்காலமும் வந்தது. பலரும் தொழத்தக்கதும் மலர்கள் விரிதற்குக் காரணமாகியதுமான அவ்வழகிய காலத்தே பனம் பூங்கண்ணியைப் பூமாலையோடணிந்தவர்களும் தம் அரசனது போர்வினையை முடித்தவர்களுமான வாள் வீரரது யானைக்கோடழுத்தினவும் வேல் கணைகளாற் கிழிப்புண்டு புண்பட்டனவுமான மார்புகளை, அவர்கள் வீரபத்தினியர் தம் அழகிய தனங்களால் வேதுகொண்டு ஆற்றுவித்தனர். இங்ஙனம் ஆற்றுவிக்க அவ்வீரர்கள் மன்மதபாணம் பாய்ந்தவர்களாய், ‘இம்மகளிரது கடைக் கண்கள் முன்பு நமக்குப் பாசறைக்கண்ணே வருத்தஞ்செய்தனவாயினும், இம்மாலைக் காலத்து அதற்கு மருந்துமாயுள்ளன’ என்று புகழ்ந்தேத்த, அதுகேட்டு அம்மகளிர் தம் பவளவாயினின்று நிலவெழக் கடைக்கண்ணோக்குடன் புன்சிரிப்பாகிய விருந்தூட்டி மகிழ்வித்தனர். மற்றுமுள்ள இளைஞரான வீரர்கள் இசைவல்ல