பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பத்தினிக்கடவுளைப் பிரதிஷ்டித்தல்.

81

உருகெழு மரபி னயிரை மண்ணி
இருகட னீரு மாடினோ னாயினும் 7
சதுக்கப் பூதரை வஞ்சியுட் டந்து

மதுக்கொள் வேள்வி வேட்டோ னாயினும்” 8

இன்றுவரை ஒருவரும் நிலைத்தவராகக் காணப்படாமையின் இவ்யாக்கை நிலையற்றதென்பதை நீயே யுணர்வாய்; விரிந்தவுலகத்திற் பெருவாழ்வுடையராகிய செல்வரிடத்தே அச் செல்வந்தானும் நிலையாதென்பதைத் தமிழரசரையிகழ்ந்த இவ்வாரியமன்னரிடத்தில் நீயே கண்டனையன்றோ? இனி இளமைநிலையாதென்பதை அறிஞர் உனக்கு உரைக்க வேண்டுவதேயில்லை; என்னெனின், திருவுடை மன்னனாகிய நீயும் உனது நரைமுதிர்ந்த யாக்கையைக் காண்கின்றாய்; தேவயோனியிற் பிறந்த ஒரு நல்லுயிர் அதனிற்றாழ்ந்த மக்கட் பிறவிக்குத் திரும்பவுங் கூடும். மக்கள்யாக்கையிற் பொருந்திய ஆன்மா அவ்வாறே விலங்குடலையெடுத்தலும், அவ் விலங்குடலையெடுத்தது துக்கமிகுந்த நரக்கதியையடைதலும் உண்டாம். ஆதலால், இவ்வுயிர்கள் ஆடுகின்ற கூத்தரைப் போல ஓரிடத்தே ஒரு கோலங்கொண்டு நிலைத்தல் ஒருபொழுதுமில்லை. தான் செய்கின்ற கருமவிதிக்கேற்ப உயிர்கள் அவ்வக்கதியை அடையுமென்பது குற்றமற்ற அறிஞரது மெய்யுரையாகும் ; ஆதலால், இவற்றை நன்குணர்ந்து, எழு முடியாரந் தாங்கிய வேந்தே! வழிவழியாக நின்னாணை வாழ்வதாக; யான் இவற்றைப் பிறர் போலப் பொருட்பரிசில் காரணமாக உன்பாற் சொல்லவந்தவனல்லேன். மற்று, நல்வினைப் பயனால் உத்தமசரீரம் பெற்ற ஒரு நல்லுயிர், செய்யவேண்டிய கருமங்களைச் செய்தலின்றி, இவ்வுலகத்துப் பிறந்திறப்-

6