பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் 111

துள்ள கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுச் செப்டேடொன்று, வேதியர் குலத்தில் அரிதிபுத்திர கோத்திரத்தில் பிறந்த இருடிகள் மூவருள் மாணவியர் என்பார் ஒருவரெனவும், அவர், “வேதாத்தியயனமும் சாதுர்மாஸ்ய ஹோமங்களும் யாகங்களும்” செய்து வந்தார் எனவும், அவரது மனையில் கடம்பமரம் ஒன்று -வளர்ந்திருத்தது எனவும், அதனைப் பேணிப் புறந்தந்து வந்த சிறப்பால் அவர் வழிவந்தோர் கடம்பர் எனப்படுவாராயினர் எனவும்[1] கூறுகிறது, ஒருகால் சிவபெருமான் திரிபுரமெரித்துப்போந்து தமது நெற்றி வியர்வையை வழித்து ஒரு கடம்ப மரத்தின் அடியில் சிந்தினர் என்றும், அத்துளிகளிலிருந்து திரிலோசக் கடம்பன் என்பான் தோன்றினான் என்றும் இசில கல்வெட்டுகள் செப்புகின்றன[2]; நந்த வேந்தருள் ஒருவன் மகப்பேறின்றிக் கயிலை மலையில் தவஞ்செய்தான் எனவும், அப்போது வானவர்கள் அவன் கையில் கடம்ப மலர்களைச் சொரிந்து வாழ்த்தினர் எனவும், வானில் வானொலி தோன்றி அதற்கு மக்கள் இருவர் தோன்றுவர் என்றதாக, அவ்வாறு தோன்றிய இருவர் வழிவந்தோர் கடம்பராயினர் எனவும் வேறுசில விளம்புகின்றன.[3]

களிறொன்று மாலை சூட்டிக் கரிகாலனை சோழனாக்கிற்று என்று பழமொழி யென்னும் நூல் கூறுவது போலத் திரிலோசனைக் கடம்பன் கடம்ப வேந்தனானான் என்றொரு வரலாறும் உரைக்கப் படுகிறது.[4]


  1. Ep.Car. part1. Shikarpur Taluk No. 176.
  2. George M.Moracs; The Kadamba Kula. p.8.
  3. J.B.B.R.A.S. vol ix p.243.
  4. Bom.Gazet.Kanara, Part ii p.78.