பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பல்யானைச் செல்கெழு குட்டுவன் 139



நாட்டின் பல்வகைத் திணை வளங்களையும் எடுத்தோதினார். நெய்தற் பகுதியில் கடற்கரையை ஒட்டிக் கழிகள் உள்ளன; அவற்றில் நெய்தல்கள் மலர்ந்திருக்கும்; கரையோரங்களில் ஞாழல் மரங்கள் நிற்கின்றன; கழியில் மீன் வேட்டம் ஆடிய புள்ளினம் கழிக்கானலில் நிற்கும் புன்னையில் வந்து தங்குகின்றன. கடலலைகள் கரையில் சங்குகளையும் பவளக்கொடிகளையும் கொணர்ந்து ஒதுக்குகின்றன; சங்குகள் ஒலிக்க அவற்றின் முத்துக் களையும் பவளக்கொடிகளையும் நெய்தலில் வாழ்வோர் எடுத்துக்கொள்ளுகின்றனர்; ஒருபால், குறிஞ்சி நிலத்து ஊர்கள் உள்ளன; அங்கே அழகிய கடைத் தெருக்கள் காணப்படுகின்றன ; கடைகளில் காந்தட் கண்ணி சூடிவரும் கொலைவில் வேட்டுவர், தாம் கொணரும் ஆமான் இறைச்சி, யானைக்கோடு ஆகியவற்றைத் தந்து அவற்றின் விலைக்கீடாகக் கள்ளைப் பெறுகின்றனர்; கடைக்காரர் அவற்றைப் பிற நாட்டவர்க்குப் பொன்னுக்கு மாறுதலால், கடைத்தெழு பொன் மிகுந்து பொலிகின்றது. மற்றொருபால் மருத நிலத்தில் காணப்படுகிறது; அங்குள்ள ஊர்களில் மருத மரங்கள் வேரோடு சாய்த்துவரும் புது வெள்ளத்தை மணல் மூடைகளைப் பெய்து அணை கட்டும் மக்கள் மணற்கரைப் பகுதி நீர்ப் பெருக்கால் கரைந்து உருகுவது கண்கள் ஆரவாரித்து அடைக்கின்றனர்; ஒருபால், ஊர்களில் விழாக்கள் நடக்கின்றன; மக்கள் பலர் விழாப்பொலிவு கண்டு தம் சீறூர்க்குச் செல்கின்றனர்; அவ் விழாக் காலத்தில், கரும்பின் அரிகாலில், காலமல்லாக் காலத்துப் பூக்கும் பூக்கள் மலிந்துள்ளன.