பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/158

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

156 சேர மன்னர் வரலாறு



சோழர்குலப் பெண். பதுமன் தேவியென்ற இப்பெயரைக் கண்டோர், இவள் பதுமன் என்பவனுக்கு மனைவியென்று பொருள் கொண்டு இப்பதுமன்தேவி இமயவரம்பனுக்கு உடன்பிறந்தவள் எனக் கருதி இவள் மகனான நார்முடிச்சேரல் மருமக்கள் தாய முறையில் அரசு கட்டில் ஏறினான் என்று கூறிவிட்டனர். அஃது வரலாற்று உண்மையன்று.

இனி, அவ்வரலாற்று உண்மையைக் காண்பது முறையாகிறது. ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகட்கு முன்பு, தமிழ்நாட்டில் பேரரசு நிறுவி வாழ்ந்த சோழ வேந்தரின் மனைவியர் பெயர்களைக் கல்வெட்டுகள் குறிக்கின்றன. அவர்கள், வானவன் மாதேவி என்றும், பஞ்சவன் மாதேவி என்றும், செம்பியன் மாதேவி என்றும், சேரவன் மாதேவி என்றும் பெயர் தாங்கியிருந்தனர். வானவன் மாதேவியார் இரண்டாம் பராந்தகனுக்கு மனைவி; பஞ்சவன் மாதேவி என்பது உத்தம சோழன் மனைவியது பெயர். செம்பியன் மாதேவியார் முதற் கண்டராதித்த சோழருடைய மனைவியாராவர். இவ்வாறே வில்லவன் மாதேவி, பாண்டிமாதேவி, சேரன்மாதேவி என்ற பெயருடைய அரசியர் பலர் இருந்துள்ளனர். இப்பெயர்களைப் போலவே, பண்டை நாளைத் தமிழ்ச்சேர மன்னர் மனைவியரும் பெயர் பூண்டிருந்தனர். அதனால் அவர்கள் பெயரை இச்சோழவேந்தர் மனைவியர் பெயர்போலக் கொல்வது நேர்மையேயன்றி வேறாகக் கொண்டு, இயைபில்லாத, மிகவும் பிற்காலத்தே நுழைந்த