பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

176 சேர மன்னர் வரலாறு


"வேந்தே, இத் தூசிப்படையை இங்கே தங்காவாறு செய்தருள்க; எமக்கு புகல் வந்து காப்பவர் பிறர் இல்லை'’ என ஊக்கமிழந்து வலியடங்கிய நிலை யினராய் வேண்டினர்; அவரது மெலிவைக் கண்டு வேந்தன் பேரருள் புரிந்தான்.

தாமும் சேரர் குடிக்குரியோர் எனச் சொல்லிக் கொண்டு, வேறு வேந்தர் சிலர் நார்முடிச் சேரலுடன் தும்பை சூடிப் பொருதனர். சேரமான் அவர்களையும் வென்று புறம் பெற்றதோடு, அவரால் அழிவுற்ற நாட்டு உயர்குடி மக்களைப் பண்டு போல் வளமுற வாழுமாறு நிறுத்தினான். இதனால் சேரநாட்டுத் தலைவர் பலரும் அவனைத் தலைவனாகக் கொண்டு பேணினர்; அதன் விளக்கமாக நார்முடிச் சேரலின் நன் மார்பில் “எழுமுடி கெழீஇய“ மார்பணி பொலிவுற்றது.

காப்பியனார், இவ்வாறு அவனுடைய நலம் பலவும் எடுத்தோதி, முடிவில் அவன் நன்னனை வென்று அவனது காவல் மரமான வாகையைத் தடிந்து பெற்ற வெற்றியைப் “பொன்னங் கண்ணிப் பொலந்தேர் நன்னன், சுடர்வீ வாகைக் கடிமுதல் தடிந்த, தார் மிகுமைந்தின் நார்முடிச் சேரல்” என்று பாராட்டினார்.

அங்கே சேரமான் தரும் கள்ளையுண்ட சுவையால் வேறுபுலம் நாடாது இரவலர் அவனையே சூழ்ந் திருந்தனர். “குழைந்து காட்டற்குரிய உன்னமரம் கரிந்து காட்டினும், இரவலரை மகிழ்விக்கும் அருண் மிகுதியால், சேரல் நேரிமலையிடத்தே உள்ளான்; விறலி, நீ அவன்பாற் சென்றால், மகளிர் இழையணிந்து சிறக்கப்