பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/189

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் 187



மேல் தம் படையினை எறியார். நின் தானைத் தலைவர், நகைவர்க்கு அரணமாகிப் பகைவர்க்குச் சூர் போல் துன்பம் செய்வார். இவ்வாறு, பலவகையாலும் மாண்புறுகின்றாய்; ஆதலால் நீ நெடிது வாழ்க[1] என வாழ்த்தினர்.

இப்பாட்டின்கண் குறித்த திருமாலை, பதிற்றுப்பத்தின் பழையவுரைகாரர், திருவனந்தபுரத்துத் திருமால் என்று கூறுகின்றனர். திருவனந்தபுரம் பாண்டி நாட்டுக்கும் சேர நாட்டுக்கும் இடைப்பட்ட வேணாட்டில் இடைக்காலத்தில் சிறப்புற்ற பேரூர்; நார்முடிச்சேரல் காலத்தில் இருந்து விளங்கியதன்று; இடைக்காலத்தில் தோன்றிய ஆழ்வார்களில் எவரும் அதனைப் பாடாமையே இதற்குப் போதிய சான்று. காப்பியனார் குறிக்கும் திருமால், வஞ்சிமாநகர்க்கு அண்மையில் இருந்த ஆடக மாடத்துத் திருமாலாதல் வேண்டும். இதன் உண்மையை ஆராய்ந்த அறிஞர் சிலர், சுகந்தேசம் என்ற வடமொழி நூலில், வஞ்சிநகர்க்கு அண்மையில் கனக பவனம் ஒன்று இருப்பதாகக் கூறப்படுகிறதெனவும், அதுவே இளங்கோவடிகள் குறிக்கும் ஆடக மாடமாகலாம் எனவும், அப்பகுதி பின்னர் அழிந்து போயிற்றெனவும்[2] கூறுகின்றனர். இனி கேரளோற்பத்தி என்னும் நூல், திருக்காரியூர் என்னுமிடத்தே பொன்மடம் ஒன்று இருந்தது எனக் கூறுகிறது[3]. இக் கூறிய கனக பவனமும்[4] பொன் மாடமும் வஞ்சிநகர்க் கண்மையில் உள்ளவை யாதலால், இவ்


  1. பதிற். 31.
  2. Chera kings of Sangam Period p. 86-9
  3. Ibid. 46-7.
  4. “ஆடகமாடத்தின்” வடமொழி பெயர்ப்புக் கனக பவனம்,