பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

196 சேர மன்னர் வரலாறு



“மழை பெயல் மாறிய கழைதிரங்கு அத்தம்
ஒன்று இரண்டு அல்ல பல கழிந்து திண்டேர்
வசையில் நெடுந்தகை காண்கு வந்திசினே[1]

என்று தொடங்கி, நாளும் குதிரை யூர்ந்து பயின்ற நின் தாள், வெற்றிமுரசு முழங்க, அலைகள் பிசிர் பிசிராக உடையுமாறு “படுதிரைப் பனிக்கடல்” உழந்ததனால் வருந்தா தொழிவதாக என்று வாழ்த்தி, “வேந்தே, வழி வழியாகக் கடற்போர் செய்து பயின்றவன் போல நீ இக் கடற் போரைச் செய்து பெருவென்றி எய்தினாய்;

‘இனியார் உளரோ? நின்முன்னும் இல்லை;
மழைகொளக் குறையாது புனல்புக நிறையாது
விலங்குவளி கடவும் துனிங்கிருங் கமஞ்சூல்
வயங்குமணி இமைப்பின் வேல் இடுபு
முழங்குதிரைப் பனிக்கடல் மறுத்திசி னோரே[2]

என்று எடுத்தோதிப் பாராட்டினார்.

இவ்வாறு பாடி வந்த பாணர் கூத்தர் விறலியர் பலருக்கும், செங்குட்டுவன், கடலிற் பகைவர்பாலும் பிற பகைவர்பாலும் பெற்ற அரும்பெரும் பொருள்களை மழைபோல் வரையாது நல்கி, “இனிது புறந்தந்து அவர்க்கு இன்மகிழ்” சுரந்தான். அதனால், அவர்கள் பலரும் அவன் திருவோலக்கத்தே நெடிது தங்கினர். அதனை நேரிற் கண்ட பரணர்,

“கோடுநரல் பௌவம் கலங்க வேலிட்டு
உடைதிரைப் பரப்பில் படுகடல் ஒட்டிய
  1. பதிற். 45.
  2. பதிற். 46.