பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

202 சேர மன்னர் வரலாறு


னத்தில் தோன்றிப் பாண்டி நாட்டு மதுரை மாநகரை அடைந்த கோவலன் கண்ணகி என்ற இருவருள், கோவலன், தன் மனைவி கண்ணகியின் காற்சிலம்பு விற்க முயலுகையில், பாண்டியனால் தவறாகக் கொலை யுண்டான். அவன் மனைவி கண்ணகியென்பாள் மன்னனது தவற்றை வழக்குரைத்துக் காட்டி மதுரை மூதூரை எரித்துவிட்டு வைகையாற்றின் கரை வழியே சேர நாடுவந்து ஒரு வேங்கைமரத்தின் நிழலில் தங்கி விண்ணுலகடைந்தாள். இதற்குச் சிறிது காலத்துக்கு முன் செங்குட்டுவன் தம்பி இளங்கோ என்பார், அரசுரிமையைக் கையிகந்து துறவு பூண்டு குணவாயிற் கோட்டம் என்னுமிடத்தே உறைவாராயினர். பொறை நாட்டுப் பகுதியிலுள்ள சீத்தலையென்னும் ஊரில் சாத்தனார் என்ற சான்றோர் ஒருவர் தோன்றி மதுரை மாநகர்க் கண் கூலவாணிகம் செய்து பெருஞ்செல்வம் ஈட்டினார். பின்னர், அவர் அச் செல்வத்தையும் வாணிகத்தையும் தம் மக்கள்பால் விடுத்துத் துறவு பூண்டு சேரநாடு வந்து சேர்ந்தார். செங்குட்டவன் அவர்க்கு வேண்டுவன நல்கிச் சிறப்பித்து தோடு சாத்தனூர் என்று ஓர் ஊரையும் நல்கினான். அது யவன நாட்டுத் தாலமி (Ptolemy) என்போரால் மாசாத்தனூர் (Mastanour) என்று குறிக்கப்பட்டுள்ளது.

ஒருகால் செங்குட்டுவன் மலைவளம் காண விரும்பித் தன் மனைவி இளங்கோ வேண்மாள் உடன்வரப் பேரியாற்றங்கரைக்குச் சென்றான். அங்கே, அதற்கு இலவந்திகை வெள்ளிமாடம் என்றோர் அரண்மனை இருந்தது அப்போது அவனுடன் அரசியற்