பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

220 இது சேர மன்னர் வரலாறு



குறித்து முன்றேர்க் குரவை ஆடினன். அக் காலை, முரசு முழங்க, கையில் வாளேந்தி, மார்பிற் பூணணிந்து, சென்னியில் உழிஞை சூடி, அவன் ஆடியதைக் கண்ட காக்கை பாடினியார், விழாக் காலத்தில் கூத்தரது ஆடுகளத்தில் அவர்கள் ஆடுவதை நம் சேரலாதன் அறியான், ‘வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சி, வீந்துகு போர்க்களத்து ஆடுங் கோவே[1]’ என்று பாடி இன்புற்றார்.

இவ்வாறு அந்தப்புரத்தும், திருவோலக்கத்தும், எடுத்துச் செலவின்போதும், உடனிருந்து தமிழ் பாடி அறிவின்பம் நல்கிய காக்கைபாடினியார்க்குக் ‘கலன் அணிக’ என ஒன்பது காப்[2] பொன்னும், நூறாயிரம் காணமும் கொடுத்துத் தன் பக்கத்திருக்கும் அரசியற் சுற்றத்தாரோடு உடன் இருந்து அறிவின்பம் நல்குமாறு பணித்தருளினான். இவ்வாறு ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் முப்பத்தெட்டியாண்டு வீற்றிருந்தான் என்று பதிகம் கூறுகிறது.

காக்கைபாடினியார் சேரலாதனை வாழ்த்திய வாழ்த்துரைகள் ஒரு தனிச் சிறப்புடையவை. சோழநாட்டு வேந்தன் ஒருவன், பண்ணன் என்பவனை வாழ்த்தலுற்று, “பண்ணனே, நீ யான் வாழ்தற்குரிய நாளையும் உன் வாழ்நாளோடு கூட்டி வாழ்க” என வாழ்த்தியதைப் புறநானூற்றில் காண்கின்றோம். இவ் வுலகில் நல்வினை செய்பவர் துறக்க வுலகு சென்று நெடிது நீடுவாழ்வர்” எனத் திருவள்ளுவர் கூறுவதனாலும் அறியலாம். காக்கை பாடினியார், சேரலாதனை


  1. பதிற். 56.
  2. கா - ஒன்பது கழஞ்சு.