பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

செல்வக் கடுங்கோ வாழியாதன் 227



கொண்டாராயினும், அவற்றின் பாற் பற்றுக்கொள்ளாது ஏனைப் பரிசிலர்க்கு வழங்கினார். அந் நிலையில், அவர் நோயுற்று வந்தபோது வேந்தனைக் காண வொண்ணாத படி இடை நின்று தடுத்த சான்றோர் சிலர் அவரை அணுகித் தமது தவற்றைக் கூறித் தம்மை அருளுமாறு அவரை வேண்டினர். அருளும் அன்பும் இல்லாத தீயோர் நிரயங் கொள்வர் என அவர் மொழிந்தது அவர்கள் உள்ளத்தை அலைத்தது. அவரும் அருள் சுரந்து, சான்றோர்களே, நரைத்துத் திரைத்து முதுமை எய்தியும், உயிர் வாழ்வதற்குப் பண்பும் பயனுமாகிய அன்பும் அறமும் கொள்ளாது நிரயம் புகுதற்குச் சமைந்தீர்; நாளைக் கணிச்சி யேந்திக் கொண்டு காவலன் பற்றுங்கால் நம்முடைய பயனில் வாழ்வை நினைந்து வருந்துவீர்கள். அதற்குப் பாதுகாவலாக இதனைச் செய்ம்மின்; முதுமை மிக்கதனால், நும்பால் செய் லாற்றும் வலியில்லை; அதனால், நல்லதே செய்யுமின்; நுமக்கு அஃது இயலாதாயின் அல்லது செய்தலைக் கைவிடுமின்; அதுதான் எல்லாரும் உவப்பது; அன்றியும், நல்லது செய்தோர் எய்தும் நலத்தைப் பெறும் நல்வழியுமாகும்[1]” என்றார். எல்லாரும் அவரை வழிபட்டு வாழ்த்தி வழிவிட்டனர்.

ஆடுகோட்பாட்டுச் சேரலாதனுக்குப் பின்னர்க் குட்டுவர் குடியில் தக்கவர் இலராயினர். செங்குட்டுவன் மகனான குட்டுவன் சேரல், ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் அரசு வீற்றிருக்கும்போதே மகப்பேற்றின்றி


  1. புறம். 195.