பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/253

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

செல்வக்கடுங்கோ வாழியாதன் 251



மலையில் ஒளிப்பாய்; சேரமான் பால் பொழுது வரையறுத்தல், புறங்காட்டி இறத்தல் முதலிய குற்றம் சிறிதும் இல்லையல்லவா? அவ்வாறு இருக்கவும் நீ நாணமின்றி, ‘பகல் விளங்குதியால் பல்கதிர் விரித்தே[1]”, என்று உள்ளுதோறும் இன்பம் ஊறும் தெள்ளிய தமிழ்ப்பாட்டைப் பாடினார்.

பின் பொருநாள், கபிலர் தானைமறவர் சிலரைக் கண்டார். அவரோடு அளவளாவியதில், வினைமுடியும் வரை அவ் வினைமேல் நின் அவரது நினைப்பு அது முடிந்ததும், தத்தம் மனை மேல் படர்ந்திருந்தமை தெரிந்தது. அவர், செல்வக்கடுங்கோவைக் கண்டு, “வேந்தே , நின் தானை மறவரைக் கண்டேன். பகைவர் மதிலை அழித்தல்லது உணவு கொள்வதில்லை என வஞ்சினம் கூறி, அது முடியுங்காறும் உண்ணாதேயிருந்து முடிந்த பின்பே உண்டொழுகும் உரவோராக இருக்கின்றனர்; பகைவர் ஊரைக் கொண்டன்றி மீள்வதில்லை என உறுதி கொண்டிருந்த அவர்கள், அவ்வூர்களைக் கைக்கொண்டு மகிழ்கின்றனர்; அதனோடமை யாது, வேறு செய்வினை யாது என் வினைமேல் நினைவுறுகின்றனர். ‘இவர்கட்குத் தம் மனைவாழ்வில் நினைவு செல்லாதோ?’ என்ற ஐயம் என் நெஞ்சில் எழத் தொடங்கிற்று. பகைவர் களிறுகளைக் கொன்று அவற்றின் கோடுகளைக் கைக்கொண்டு மனையடைந்து, பின்னர் அவற்றைக் கள்ளுக்கு விற்றுண்டு. உத்தரகுருவில் வாழும் உயர்ந்தோரைப் போல் அச்சம் அறியாத இன்ப


  1. புறம். 8.