பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை 263



இருந்தான். படைப் பெருமை கண்ட வேளிருட் பலர் சேரமான் பக்கல் சேர்ந்து கொண்டனர்.

தொடக்கத்தில், காவிரிக் கரையில் இருந்து கொண்டே சேரரது படை வெட்சிப் போரைத் தொடங் கிற்று. ஆயர் தலைவர் சிலர் கரந்தை சூடிப் பொருது சேரரது பெருமை கண்டதும் அஞ்சித் தம்பால் இருந்த ஏனை ஆனிரைகளையும் கொணர்ந்து தந்து, “வேந்தே, எங்கட்கு இவற்றின் வேறாகச் செல்வமும் வாழ்வும் இல்லை; எங்களைக் காப்பது நின்கடன்'’ என்று சொல்லி அடி பணிந்தனர். வெட்சி வீரரான சேரர் படைத் தலைவர், அவர்களுடைய நிலைமையைக் காடு அருள் மிகுந்து, தாம் கவர்ந்து கொண்ட ஆனிரைகளையும் அவர்கட்கு அளித்து இனிது வாழுமாறு விடுத்து வடக்கு நோக்கிச் சென்றனர். கொல்லிக் கூற்றத்தின் இடையே அகழும் மதிலும் நன்கமைந்த ஓரிடத்தே கழுவுள் இருந்து வந்தான். ஆயர் தலைவர்கள் சேரமான் பால் புகல். அடைந்ததையும், அவர்கட்கு முன்பே தனக்குத் துணை செய்ய வந்த வேளிர்கள் தன்னின் நீங்கிச் சேரரொடு சேர்ந்து கொண்டதையும் அவன் அறிந்தான். முன்பு, அக் கொங்கு நாட்டில் வாழ்ந்த வேளிர்கள் தன்னொடு பகைத்துத் தனது காமூரைத் தீக்கிரையாக்கி அழித்த செய்தியை நினைத்தான்; “பழம்பகை நட்பாகாது” என்னும் பழமொழியின் உண்மை அவனுக்கு நன்கு தோன்றிற்று. கொல்லிக் கூற்றத்துக்கு வடக்கில் வாழும் அதியமான்களுக்கு அறிவித்து அவர்களது துணையைப் பெறக் கருதினான். ஒருகால் அவர்களும் வேளிரது. தொடர்புடையராதலால் தன்னைக் கைவிடுவதும்