பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/283

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை 281



மிக்க செல்வமும் சிறப்பும் உடையனாயினும், தன்னை நாடிவரும் பரிசிலர்க்கு அவர் தம் வரிசை அறிந்து நல்கும் கொடை நலம் இலனாயினான்.

இப்போது பொன்னானி வட்டம் இருக்கும் பகுதியில் பெருங்குன்னூர் என்றோர் ஊருளது. அதற்கு அந்நாளில் பெருங்குன்றூர் என்று பெயர் வழங்கிற்று. அவ்வூரில் நல்லிசைச் சான்றோர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர், பிற்காலத்தே பெருங்குன்றூரைத் தமக்குக் காணியாட்சியாகப் பெற்றுக் கிழார் என வேந்தரால் சிறப்பு நல்கப் பெற்றதனால் பெருங்குன்றூர் கிழார் எனச் சான்றோர்களால் குறிக்கப் பெறுவார். ராயினர். குடக்கோச்சேரல் இரும்பொறை காலத்தில். அவர் நல்லிசைப் புலமை பெற்று விளங்கினாராயினும், கிழாராகவில்லை; அவர் எளிய நிலையிலேயே இருந்துவந்தார்.

அவர், ஒருகால், குடக்கோச் சேரல் இரும் பொறையைக் கண்டு தனது புலமைநலம் தோன்ற இனிய பாட்டைப் பாடினார். அவன் பெரிதும் மகிழ்ந்து அவர்க்கு உண்டியும் உடையும் தந்து பரிசில் வேறே நல்காது காலம் நீட்டித்தான். புலவரது உள்ளம் வறுமையின் கொடுமையை நினைத்து பெருவாட்டம் உற்றது. அவர் குடக்கோவை நோக்கி, “அரசே, உலக மக்களைப் புரத்தற்குரிய நினது உயர்ச்சியைக் கருதாமல், அன்பு கண்மாறி அறம் நினையாதிருக்கின்றாய். உன்னைப் போலும் வேந்தர் பலரும் அப் பெற்றியராய் விடின், என்னைப் போலும் பரிசிலர் இவ்வுலகிற் பறிக்கமாட்டார்கள் என்றார்.