பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குடக்கோ இளஞ்சேரலிரும்பொறை 285



அவ் வாட்டத்தை உடனே களைந்தருள வேண்டும்[1]” என்று தனது கருத்தைச் சோழ வேந்தனுக்குப் பெருங்குன்றூர் கிழார் எடுத்துரைத்தார். புலவர்க்குப் புக்கிலாய் விளங்கும் சோழர் பெருமான், அவர் கருத்தை முன்னமே அறிந்து பெரும் பரிசில் நல்கிவிடுத்தான். சான்றோரும் அவனை மனமார வாழ்த்திவிட்டுத் திரும்பி வரலானார்.

திரும்பி வருங்கால், அவர் கீழ்க் கொங்கு நாடு நடந்து வையாவி நாட்டு வழியாகத் தனது பொறை நாட்டுக்கு வரவேண்டியவராயினார். அதற்குக் காரணமும் உண்டு. கையாவி நாட்டில் பொதினி (பழனி) மலைக்கு அடியில் உள்ள ஆவிகுடியில் இருந்து பெரும் பேகன் என்ற ஆவியர் பெருமகன் பெரு வள்ளன்மை கொண்டு விளங்கினான். அவன் முல்லைக்குத் தேர் ஈத்த வேள் பாரி போல, மயிலுக்குப் போர்வை அளித்த வள்ளியோன். அவற்குக் கண்ணகி யென்பாள் கோப்பெருந்தேவியாவாள். அவள் வான்தரு கற்பும் மான மாண்பும் உடைய பெருமக்கள். அந்த வையாவி நாட்டில் நல்லூர் ஒன்றில் பெரு வனப்புடைய பரத்தை யொருத்தி வாழ்ந்தாள். அவன்பால் பெரும் பேகனுக்கு நட்புண்டாயிற்று. அதனால், அவன் கண்ணகியைப் பிரிந்து பரத்தையின் கூட்டத்தையே பன்னாளும் விரும்பி ஒழுகினான். அவனது புறத் தொழுக்கம் ஆவியர் பெருங்குடிக்கு மாசு தருவது கண்ட கண்ணகி, தனித்ததொரு பெருமனையில் இருந்து


  1. புறம். 266.