பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/289

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குடக்கோ இளஞ்சேரலிரும்பொறை 287



முதற்கண் தன் தவற்றுக்கு நாணி அவர்க்கு உரிய பரிசில் நல்கிவிடுத்தான். சான்றோரும் பின்பு தனது பெருங்குன்றூர் வந்து சேர்ந்தார்.

பெருங்குன்றூர் கிழார் சோழநாடு சென்று திரும்பி வருவதற்குள், பொறை நாட்டில் சேரமான் குடக் கோச்சேரல் இரும்பொறை இறந்தான். அவன் தம்பி குட்டுவன் இரும்பொறைக்கு மையூர் கிழான் மகள் வேண்மாள் அந்துவஞ்செள்ளை என்பவன்பால் பிறந்த மகனான குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை சேரமானாய் அரசுகட்டில் ஏறினான். மூத்தவனான சேரல் இரும்பொறை இறக்கு முன்பே குட்டுவன் இரும்பொறை இறந்துபோனமையின், இளஞ்சேரல் இரும்பொறை அரசுக்குரியவனானான்..

இளஞ்சேரல் இரும்பொறை அரசுகட்டிலேறிய சின்னாட்கெல்லாம், காவிரியில் வடகரையில் உள்ள கொங்கு நாட்டில், அதன் கிழக்கில் இருந்த விச்சி மலைக் குரிய விக்சிக்கோவும் சோழ பாண்டிய அரசிளஞ் செல்வர்களும் இரும்பொறையின் இளமையை இகழ்ந்து குறும்பு செய்தனர். கீழ்க் கொங்கு நாட்டிலிருந்த கொங்கரும் பொறையரும் பெருந் திரளாக இளஞ்சேரல் பக்கல் நின்று கடும் போர் புரிந்ததனால், இரு வேந்தரும் விச்சிக் கோவும் தோற்றோடினர். இரும்பொறையும் வெற்றி வீறு கொண்டு திரும்பினான்.

விச்சிமலையென்பது இப்போது திருச்சிராப்பள்ளி வட்டத்தில் பச்சைமலை என வழங்குவதாகும். இம் மலையில் வாழும் மலையாளிகள் அதனைப் பச்சிமலை என்று கூறுவதும், அம் மலையின் கிழக்கே அதன்