பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/295

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை 293



அதனால் அவனுடைய பாசறை இருக்கைக் காலம் நீட்டிப்பதாயிற்று. அவனது பிரிவு மிக நீண்டது கண்ட இரும்பொறையின் கோப்பெருந்தேவிக்கு ஆற்றாமை பெரிதாயிற்று. அதனைக் குறிப்பால் உணர்ந்த பெருங் குன்றூர் கிழார் இரும்பொறை பாசறையிட்டிருக்கும் இடத்துக்கு வந்தார். அப்போது பகைவர் எயிலொன்று முற்றப்பட்டிருந்தது.

பாசறைக்கண் களிற்றியானைகள் மதம் மிக்கு மறலின; போர் எதிராது எயில் காத்தல் ஒன்றே செய்தனர். யானை மறவர், மதம்பட்ட களிறுகளைப் பிடியானைகளைக் கொண்டு சேர்த்து மதம் தெளி வித்தனர். அவ்வாறு செய்தும், பல களிறுகள் மதம் குன்றாமல் மைந்துற்றன. குதிரைகள் போர்க் கோலம் செய்யப் பெற்றுப் பகைவர் போர் தொடுக்காமையால் கனைத்துக் கொண்டிருந்தன. கொடியுயர்த்திய தேர்கள் நிரல்பட நின்று நிகழ்ந்தன. கிடுகு தாங்கும் வாள் வீரரும் வேல் வீரரும் போர் நிகழாமை கண்டு, தாம் ஏந்திய படை விளங்க வேந்தனது ஆணையை எதிர்நோக்கி ஆரவாரித்து நின்றனர். இவ் வண்ணமே நாள்கள் பல கழிந்தன.

பாசறை யிருக்கைக்குப் பெருங்குன்றூர் கிழார் வந்தது வேந்தனுக்குப் பெரு வியப்பை உண்டு பண்ணிற்று. வினைமுற்றி வெற்றி பெறுங்காலையில், பரணர் முதலியோர் போந்து வேந்தனைப் புகழ்ந்து பாடி இன்புறுத்துவது முறை. அம் முறையன்றி, வினை நிகழ்ச்சிக் கண் வருவது வேந்தற்கு வியப்பாயிற்று. அதனை உணர்ந்த சான்றோரான கிழார், “வேந்தே,