பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/303

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குடக்கோ இளஞ்சேரலிரும்பொறை 301



செட்டியானையும் வட்டத்தில் வானியாற்றின் கரையில் உள்ள வானிப்புத்தூரே சான்று பகருகிறது. இடைக் காலத்தில் இதற்குப் பூவானி என்றும், அதனால் இதனைச் சார்ந்த நாட்டுக்குப் பூவானி நாடு என்றும் பெயர் வழங்குவதாயிற்று. சீவில்லிபுத்தூர்ப் பகுதியில் குடமலையில் தோன்றிவரும் சிற்றாறு மட்டில் பூவானி என்ற பெயர் திரியாது இன்றும் நிலவி வருகிறது.

இனி குறும்பு செய்தொழுகிய குறும்பர்களை அடக்குதற்குப் பெரும்படை யொன்று கொண்டு இரும்பொறை அப் பகுதிக்குச் சென்றான். சேரமான் ஓரிடத்தே பாசறையிட்டிருக்கையில், குறும்பர்கள் தம் படையுடன் போந்து போர் செய்தனர். சிறிது போதிற் கெல்லாம் சேரமான் பாசறையில் ஒரு பேராரவாரம் உண்டாயிற்று, பெருங்குன்றூர் கிழார் விரைந்து அங்கே சென்று அதற்குரிய காரணம் அறிந்து வந்தார். அவர், “வேந்தே, நின் அடிபணிந்து வாழும் திறமறியாது . பொருது நிற்கும் குறுநில மன்னர், களிற்றின் காற்கீழ்ப் பட்ட மூங்கில் முளைபோல அழிவது திண்ணம். போர் தொடங்குமாறு நின் தானைத் தலைவர் தண்ணுமை முழக்கினர்; உடனே மறவர் பலரும் பகைவரது படைக்குட் புகுந்து மறவர்கயுைம் களிறு முதலிய மரக்களையும் கொன்று குவித்தனர். அதுகண்டு பாசறையிலுள்ளார் பேராரவாரம் செய்தனர்; வேறொன்றும் இல்லை[1]” என்றார்.


  1. பதிற். 84.