பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/309

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குடக்கோ இளஞ்சேரலிரும்பொறை 307



தழைக்க; மாவும் புள்ளும் வண்டினமும் பிறவும் இனம் பெருகப் புல்லும் இரையும் தேனும் இனிதுண்டு இன்புறுக; இவ்வாறு நன்பல வூழிகள் செல்க; கோல் செம்மையாலும், நாட்டவர் நாடோறும் தொழுதேத்தலாலும், உயர்ந்தோர் பரவுதலாலும் அரசுமுறை பிழையாது செருவிற் சிறந்து கற்புடைக் காதலியுடன் நோயின்றிப் பல்லாண்டு வேந்தன் வாழ்க[1]” என்று வாழ்த்தினர்.

இளஞ்சேரல் இரும்பொறை, “மருளில்லார்க்கு மருளக் கொடுக்க என்று உவகையின் முப்பத்தீராயிரம் காணம் கொடுத்து அவர் அறியாமை, ஊரும் மனையும் வளமிகப் படைத்து, ஏரும் இன்பமும் இயல்வரப் பரப்பி,” “பெருங்குன்றூர் கிழார்க்கு எண்ணற்காகா அருங்கல வெறுக்கையொடு பன்னூயிரம் பாற்பட வகுத்துக் காவற்புறம் விட்டான்” என்று பதிற்றுப்பத்தின் பதிகம் கூறுகிறது.

குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை பதினாறாண்டு அரசு வீற்றிருந்தான்.


13. சேரமான் பாலை பாடிய

பெருங்கடுங்கோ மலையாள மாவட்டத்து, இப்போது வயனாடு எனப்படும் பகுதிக்குப் பண்டைக்காலத்திலும் இடைக் காலத்திலும் பாயல் நாடு என்று பெயர் வழங்கினமை


  1. பதிற். 89.