பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/312

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

310 சேர மன்னர் வரலாறு



காலத்தவர் என்பது பெறப்படும். ஆயினும் இந்த நன்னன் வேறு. களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல் காலத்தில் வாழ்ந்த நன்னன் வேறு.

பெருங்கடுங்கோவின் பாட்டுகளில் வரும் அரிய உவமங்களும் கருப்பொருள்களும் கருத்துகளும் இவரது பரந்த பெரும் புலமையை விளக்குவனவாகும். இவரது நுண்மாண் நுழைபுலப்பெருமையை ஒருவன் இனிதெடுத்துக் கூற விரும்பின், அஃது ஒன்றே ஒரு தனித்த பெரு நூலாகும் பெருமையுடையது, கருத்து களின் பொருட்கவினும், அவற்றை வெளிப்படுத்தும் சொல்வழக்கும், இயற்கைக் காட்சிகளைப் படிப்போர் மனக்கிழியிற் பொறிக்கும் சொல்வளமும், உலகிய லறிவும், உயரிய நோக்கங்கலும் படிக்குந்தோறும் வற்றாத இன்பம் சுரப்பவையாம். அரசரிற் பிறந்து அரசரில் வளர்ந்து அரசு முறைக்குரிய கலை பலவும் கற்றுத் துறைபோகிய இப் பெருங்கடுங் கோவின் பெருமை நம் தமிழ்மொழிக்கே சிறப்பாக விளங்குகிறது. “கற்றறிந்தார் ஏத்தும் கலி” எனப்படும் கலித்தொகையைக் கோத்த நல்லந்துவனார், பிற ஆசிரியர் எவரும் வைக்காதொழிந்த பாலைத் திணைப்பாட்டை முதற்கண் வைத்து முறை செய்து கோத்ததற்குக் காரணம் அப் பாட்டை இப் பெருங்கடுங்கோ பாடியது பற்றியே எனின் ஒரு சிறிதும் அது மிகையாகாது.

வெயில் தெறுதலால் வெம்மை மிகுந்து வெம்பிய அருஞ்சுரத்தைக் கூறக் கருதும் பெருங்கடுங்கோ, கோல் கோடிய வேந்தன் கொலையஞ்சா வினையாளரைக் கொண்டு அறநெறியைக் கை விட்டுக் குடிகள் வயிறு