பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/317

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ 315


கனிந்து “மராஅ மலரோடு விராய் அய்ப் பராஅம், அணங்குடை நகரின் மணந்த பூவின் நன்றே கானம் - நயவரும் அம்ம[1]” என்று பாடுகின்றார். மரங்களின் இடையே யிருந்து குயில்கள் கூவுகின்றன. அவற்றின் இன்னிசைக் குரல் அவரது செவியகம் நிறைந்து இன்பம் செய்கிறது. அதன் ஓசை அவர்க்கு ஒரு புதுப்பொருள் தருகிறது. பிரிவு கருதிய காதலர்க்குப் பிரியாதிருக்குமாறு பேசும் பெண்மகள் ஒருத்திக்கு இக் காட்சி எழுப்பும் உணர்வை எண்ணுகிறார். அந் நங்கை, “குரா மரங்கள் அரும்பு தொடுக்கின்றன; ஆகவே இது முன்பனிக் காலம் ; பின்னர் வருவது பின்பனிக் காலம்; அது பிரிந்தார்க்குத் துன்பம் தருவது; ஆதலால், கூடியுறையும் காதலர்களே, நீவிர் பிரியாதிருந்து கூடுமின்” என்று கூறுவதாக நினைக்கின்றார். “பின்பனி - அமையம் வருமென முன்பனிக் கொழுந்து முந்துறீஇக் குரவு அரும்பினவே, புணர்ந்தீர் புணர்மினோ என இணர்மிசைச் செங்கண் இருங்குயில் எதிர்குரல் பயிற்றும், இன்ப வேனிலும் வந்தன்று[2]” என்று அக் குயில் கூறுவதாகப் பாடுகின்றார்.

பாலைத்திணை பாடுவதில் வல்லவராகிய நம் புலவர் பெருந்தகை, இக் காட்சி யின்பங்களை நுகர்தற் கெனத் தலைமைக் குணங்களே நிறைந்து இளமை நலம் கனிந்து விளங்கும் தலைமகன் ஒருவனையும் தலைமகள் ஒருத்தியையும் கொணர்ந்து நிறுத்தி, அவர்ளிடையே நிகழும் பேச்சுகளை எடுத்தோதுகின்றார். தலை


  1. அகம். 99.
  2. நற். 224.