பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/334

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

332 சேர மன்னர் வரலாறு



அறிந்து கொள்ளுதலுமுண்டு; வலி மிக்கவை அக்குழியில் வீழ்ந்து கரையைத் தம் மருப்பினால் இடித்தழித்துக் கொண்டு வெளியேறுவதும் செய்யும். சேரமான், இச்சூழ்ச்சி முழுதும் நன்கு கண்டு கொண்ட கொல்களிறு போலப் பாண்டியர் செய்த சூழ்ச்சியைச் சிதைத்துப் போந்தமை பற்றி “யானைக் கண் சேய் மாந்தரன்” என்று சிறப்பிக்கப்படும் தகுதி பெற்றான் என்றற்கும் தக்க இடமுண்டாகிறது. சேர நாட்டுச் சான்றோரும் அக்கருத்து விளங்கவே இவனைப் பாடியிருக்கின்றனர்.

சேரமான், தொண்டி நகர்க்கண் சிறப்புறுவது நன்கறிந்த குறுங்கோழியூர் கிழார் ஒருகால் அவன்பாற் சென்றார். அவன் பாண்டியன் நெடுஞ்செழியனது பிணிப்பினின்றும் நீங்கிப் போந்த செய்தியைப் பாராட்டுதற்குப் பொருட்டுச் சேர நாட்டின் பல பகுதியிலிருந்தும் வேந்தரும் சான்றோரும் பிறரும் வந்து அவனது திருவோலக்கத்திற் கூடியிருந்தனர். அப்போது, குறுங்கோழியூர்கிழார், சேரமான் சிறை தப்பிப் போந்த செயலை, யானையொன்று படுகுழியில் வீழ்ந்து தன் பிரிவெண்ணி வருந்திய ஏனைக் களிறும் பிடியுமாகிய தன் இனம் மகிழப் போந்து கூடிய செய்தியை உவமமாக நிறுத்தி,

“மாப்பயம்பின் பொறை போற்றாது
நீடுகுழி அகப்பட்ட
பீடுடைய எறுழ்முன்பின்
கோடு முற்றிய கொல்களிறு
நிலைகலங்கக் குழிதொன்று