பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/335

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

யானைக்கண் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை 333



கிளைபுகலத் தலைக்கூடியாங்கு
நீபட்ட அருமுன்பின்
பெருந்தளர்ச்சி பலர்உவப்ப

வந்த சேர்ந்ததனை; வேந்தே, இதனை அறியும் நின் பகைவர் இனி நினக்குப் பணி செய்யத் தொடங்குவரே யன்றிப் பகை செய்யக் கனவிலும் நினையார்; நின் முன்னோர்,

“கொடிது கடிந்து கோல் திருத்திப்
படுவது உண்டு பகலாற்றி
இனிது உருண்ட சுடர் நேமி
முழுதாண்டோர்[1]

என்று பாராட்டிப் பாடினார். இந்த அழகிய நெடும் பாட்டைக் கேட்டு வேந்தனும் வேத்தியம் சுற்றத்தாரும் மிக்க மகிழ்ச்சி யெய்தினர். வேந்தன் கிழார்க்கு மிக்க பொருளைப் பரிசில் நல்கிச் சிறப்பித்தான்.

மலையாள மாவட்டத்தில் பாலைக்காடு பகுதியைச் சேர்ந்த நடுவட்டம் பகுதியில் கூடலூர் என்றோர் ஊர் உண்டு. அவ்வூரில் நல்லிசைப் புலமைமிக்க சான்றோர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் யானைக்கண் சேய் மாந்தரனுடைய முன்னோர்களாலே நன்கு சிறப்பிக்கப் பெற்றுக் கூடலூர் கிழார் என விளங்கியிருந்தனர். யானைக்கண் சேய் இளையனாய் இருந்த காலத்தில் அவர்பால் அவன் கல்வி பயின்றான். அவன் வேண்டுகோட்கு இசைந்தே கூடலூர் கிழார்

  1. புறம். 17.