பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/339

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

யானைக்கண் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை 337



தெளிவாம். இவையெல்லாம் நோக்காது தமிழ்வேந்தர் ஆட்சி நலங்களும் கொள்கையுயர்வுகளும் தவறாகவே பரப்பப் பெறுகின்றன. அதனால் ஏனை நாட்டவர் உண்மை அறிய மாட்டாது இருளில் விடப்படுகின்றனர்.


15. சேரமான் மாந்தரஞ்சேரல்

இரும்பொறை சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை, யானைக் கட்சேய் மாந்தரனுக்குப் பின்பு அரசு கட்டில் ஏறிய சேர வேந்தனாவன். இவனது இயற்பெயர் காணப்படாமையால், இவன் யானைக்கட்சேய் மாந்தரனும் இவனும் ஒருவரே என்றும் கருதிவிட்டனர். தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் காலத்தில் யானைக்கட்சேய் மாந்தரனும், இராயசூயம் வேட்ட பெருநற்கிள்ளியின் காலத்தில் இந்தச் சேரமான் மாந்தரனும் இருந்தமையின், இருவரும் வேறு வேறு ஆதலேயன்றி, நெடுஞ்செழியனுக்குப் பின்னர் விளங்கிய இராயசூயம் வேட்ட பெருநற்கிள்ளி காலத்தவனாகிய சேரமான் மாந்தரஞ்சேரலிரும்பொறை யானைக்கட் சேய்க்குப் பின்னோ னாதலையும் தெளியவுணர வேண்டும். இம்மாந்தரஞ்சேரல் ஆட்சி நிகழும் போது, திருமுனைப்பாடி நாட்டுத் திருக்கோவலூரில் தேர்வண் மலையன் என்ற குறுநிலத் தலைவன் ஆட்சி செய்து கொண்டு வந்தான்.

மாந்தரஞ்சேரலுடைய ஆட்சி கொங்கு நாடெங்கும் பரந்து கிழக்கிற் சோழ நாட்டைத் தனக்கு