பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32 சேர மன்னர் வரலாறு


லுள்ள பொன்னானி தாலூகாவின் தென்பகுதி குட்ட நாடென அப்பகுதியில் வாழும் மக்களால் பெயர் கூறப்படுகிறது. இதனால் குட்டநாட்டின் பரப்புத் தெளிவாகத் தோன்றுகிறது. பொன்னானி தாலூகாவுக்கு வடக்கிலுள்ள ஏர்நாடு தாலூகா அந்நாட்டவரால் இராம நாடென்று குறிக்கப்படுகிறது; இதன் பழம் பெயர் ஓமய நாடு[1] என்பது. இடைக்காலச் சோழ வேந்தர்களின் கல்வெட்டுகள்[2]. இதனை இராம குடநாடு என்று குறிக்கின்றன. இந் நாட்டுக்கும் இதற்கு வடக்கிலுள்ள குறும்பர் நாடு தாலுகாவுக்கும் கிழக்கிலுள்ள குடகு நாட்டவர் தம்மைக் குடவர் என்றும், தம்முடைய நாட்டைக் குட நாடென்றும்[3] கூறுகின்றனர். முன்னே கண்ட குடநாட்டின் வடக்கில் நிற்கும் ஏழிற்குன்றம் - கொண்கான நாட்டது என்றும், அது நன்னன் என்ற வேந்தனுக்குரியதென்றும்[4] அந் நன்னனை நன்னன், உதியன்[5] என்றும் சங்கச் சான்றோர் கூறுதலால், கொண்கான நாடு சேரர்க்குரிய குடநாட்டதென்பது தெளியப்படும்.

இவ்வாறே தெற்கில் வக்கலைக்கும், வடக்கில் கோகரணத்துக்கும் இடையில் குட்டம் குடம் என இரு பெரும் பகுதியாகத் தோன்றும் சேர நாட்டுக்குத் தெற்கில் வேணாடும், வடக்கில் கொண்கான நாடும் எல்லை களாய் விளங்கின. இந்தச் சேர நாட்டை ஏனைத் தமிழ் நாட்டினின்றும். பிரித்து வைப்பது மேற்கு மலைத்


  1. T.A.S. Vol. iii. P. 198-9
  2. M.Ep. A.R. No. 532 of 1930
  3. Imp. Gezet of India: Mysore and coorge P. 273.
  4. நற் 391.
  5. அகம் 258