பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/364

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

362 சேர மன்னர் வரலாறு



பண்ணிற்று. பலரும் கொங்கு நாடு போந்து பிட்டங்கொற்றனைக் கண்டனர். அவர் அனைவரையும், பிட்டன் தன் பெருமையும் அன்பும் விரவிய வரவேற்பளித்து மகிழ்ந்தான். அவர்களுள் ஆனிரையும் நெல் வயலும் வேண்டினாருக்கு அவையும், சிலர்க்கு நெற்குவையும், சிலர்க்குப் பொற்குவையும், சிலர்க்குப் பொற்கலங்களும் சிலர்க்குக் களிறும் தேரும் எனப் பரிசில் வகை பலவும் வரிசை பிறழாது நல்கினான்.

இவ்வாறு பிட்டன்பால் வந்த சான்றோருள், உறையூர் மருத்துவன் தாமோதரனாரும் ஒருவர். அவர் வந்திருந்தபோது ஒற்றர்கள் சிலர் போந்து பகைவர் தம்முட் பேசிக் கொள்வனவற்றை எடுத்துரைத்தனர். உறையூர் மருத்துவனார் அப்பகைவேந்தரது ஒற்றர் செவிப்படுமாறு, “பகைவர்களே, கூர்வேல் பிரிட்டன் மலைகெழு நாடன்; அவனைப் பகைத்துக் குறுகுதலைக் கைவிடுவீர்களாக; தன்பால் உண்மை அன்புடையார்க்கே அவன் எளியன்; பகைவர்க்கோ எனின், கொல்லன் உலைக்களத்தில் இரும்பு பயன்படுத்தும் கூடத்துக்கு சம்மட்டிக்கு இளையாத உலைக்கல் போல்பவன் என்று உணர்வீர்களாக,[1]” என்று பாடினர்.

வடம் வண்ணக்கன் தாமோதரனார் என்ற சான்றோரும் மதுரை மருதன்இளநாகனாரும் ஆலம்பேரி சாத்தனாரும் பிறரும் பிட்டங்கொற்றனைப் பாடிப் பரிசில் பெற்று இன்புற்றனர். அப்போது அவர்களிடையே பிட்டனுடைய வள்ளன்மை பொருளாக


  1. புறம். 170.