பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/365

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேரமான் குட்டுவன் கோதை 363


 ஒரு சொல்லாட்டு நிகழ்ந்தது. தன்னைப் பாடி வருவோர்க்கு நம் பிட்டன் நன்கொடை வழங்குவது ஒக்கும்; அவனது கொடைமடம் ஆராயத் தக்கது என்ற முடிவு அவர்களிடையே உண்டாயிற்று. அப்போது அங்கே இருந்த காவிரிப்பூம்பட்டினத்துக் காவிரிக் கண்ணனார், பிட்டனைப் பலகால் கண்டு பயின்ற வராதலால் முடிந்த முடிபாகக் கூறலுற்று, “சான்றீர், இப்பொழுது சென்றாலும், சிறிது போது கழித்துச் சென்றாலும், முற்பகல் பெற்றவன் பிற்பகல் சென்றாலும், பிட்டங்கொற்றன் தனது கொடைமடத்தால் முன்னே வந்தவன் என்னாமல் கொடுத்தலைக் கடனாகக் கொண்டு செய்பவன்; எக்காலத்தும் பொய்த்தலின்றி எம் வறுமை நீங்க வேண்டுவன நல்கிவிடுவது அவனுக்கு இயல்பு; மேலும், அவன்பால் நம்மனோர் சென்று ஆனிரை விளைக்கும் நெல்லை நெற்களத்தோடே பெறவேண்டினும், அருங்கலம் வேண்டினும், களிறு வேண்டினும், இவை போல்வன பிற யாவை வேண்டினும் தன் சுற்றத்தாராகிய பிறர்க்கு அளிப்பது போலவே நம்மனோர்க்கும் நல்குவன்[1]” என்று பாடிக் காட்டினர். கேட்டவர் யாவரும் ஒக்கும் ஒக்கும் எனத் தலையசைத்து உவந்தனர்.

பிட்டங்கொற்றன், சான்றோர் அனைவர்க்கும் அவரவர் வரிசைக் கேற்பப் பரிசில் தங்கி விடுத்தான். அதனால் தம்மை வருந்திய வறுமைத் துன்பம் கெட் நின்ற வடம வண்ணக்கன் என்னும் சான்றோர். “வன்புல


  1. புறம். 171.