பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/367

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேரமான் குட்டுவன்கோதை 365



கேட்டதும் ஆற்றாளாய்க் கண்ணீர் சொரிந்தாள்; அவளை யான் எங்ஙனம் ஆற்றுவேன்'’ என்று கூறலுற்றாள். தோழி கூற்றைப் பாட்டுவடிவில் தர வந்த ஆலம்பேரி சாத்தனார், கண்ணீரால் நனைந்த தலைவியின் கண்களை நினைத்தலும் பிட்டனுடைய குதிரை மலையிலுள்ள சுனைகளில் மலர்ந்து நீர்த் திவலையால் நனைந்திருக்கும் நீலமலர் நினைவிற்கு வரவே,

“வசையில் வெம்போர் வானவன் மறவன்,
நசையின் வாழ்நர்க்கு நன்கலம் சுரக்கும்
பொய்யா வாய்வான் புனைகழல் பிட்டன்
மைதவழ் உயர்சிமைக் குதிரைக் கவாஅன்
அகல் அறை நெடுஞ்சுனைத் துவலையின் மலர்ந்த
தண்கமழ் நீலம் போலத்
கண்பனி கலுழ்ந்தன நோகோ யானே[1]

என்று பாடித் தனது நன்றியினைப் புலப்படுத்தினார்.


19. சேரமான் கணைக்கால் இரும்பொறை

சங்க காலத்து இரும்பொறை வேந்தருள் சேரமான் கணைக்கால் இரும்பொறையே இறுதியில் இருந்தவன். குட்ட நட்டின் தென்பகுதி, வஞ்சி நகரைத் தலைநகராகக் கொண்டது; வட பகுதியில் தொண்டிகர் சிறப்புற்று


  1. அகம். 77.