பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/374

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

372 சேர மன்னர் வரலாறு



உறங்குபவன் போலக் கிடந்தான். வந்தோர் அனைவரும் கண்டு கரை செய்ய அரியதொரு பெருந்துன்பக் கடலில் மூழ்கிக் கையற்றனர். சோழன் செங்கணான் ஆணைப்படி அரசர்க்குரிய சிறப்புடன் அவனது உடல் அடக்கம் செய்யப்பெற்றது.

பின்னர் அனைவரும் சேரநாடு சென்று, அரசியற்குரியாரை ஆராய்ந்து, சேரமான் கோதை மார்பன் உரியனாதல் கண்டு அவனை ஏனைச் சேரர் குடிக்குரியோர் கூடிச் சேரமானாய் முடிசூட்டினர். கோதை மார்பன் கோக்கோதை மார்பனாய் விளக்கமுற்றான். அவனுடைய அரசவையில் பொய்கையார் வீற்றிருந்தார். அவனும் தொண்டி நகர்க்கண்ணே இருந்து வரலானான்.

தொண்டி நகர் கடற்கரைக்கும் மலைப்பகுதிக்கும் இடையிலுள்ள நகரம் மலைப்பகுதியில் தினைப்புனங்கள் பல உண்டு; புனங்காவல் புரியும் குறிச்சியர் தினையுண்ணும் புள்ளினங்களை ஒப்புதற்குத் தட்டை யென்னும் இசைக் கருவியைப் புடைப்பர். கிழக்கிற் புனமும் மேற்கிற் கானற் சோலையும் வடக்கில் முல்லைக்காடும் தெற்கில் மருத வயலும் சூழ்ந்த நானில வளமும் நன்கு பொருந்தியது இத் தொண்டி, கிழக்கிற் குறிஞ்சிக் கொல்லையில் எழும் தட்டை யோசையைக் கேட்டு மேற்கே கர்னற் சோலையில் தங்கும் புள்ளினம் ஆரவாரித்து எழும்.

ஒருகால் பொய்கையார் கோதை மார்பனைப் பாட விரும்பி வந்தபோது, எங்கள் வேந்தனை, குறிஞ்சி முல்லையாகிய நிலங்கயுைடையனாதலால் நாடன்