பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/385

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முடிப்புரை 383



கண்ணுக்கும் தெரியாமல் இருவரும் கூடி அவனுடைய ஊர்க்குச் சென்று அங்குள்ள சான்றோர் அறிய மணம் முடித்துக் கொள்ளுகின்றனர்.

அந் நிலையில் மகட்போக்கிய தாய் செவிலியிடம் மகளியல்பு சொல்லி வருந்துகின்ற துறை அமைந்தது இந்த இளங்குட்டுவனாரது பாட்டு. தன் மகள் போகிய காட்டு வழியின் கடுமையும், அருமையும், மகளினுடைய மென்மையும் தாய் சொல்வதாக இந்தச் சேரமான் வகுத்துரைக்கும் இப் பாட்டு நம்மை இன்புறுத்துகிறது. மகளின் இளமையையும் மென்மையையும் நினைத்த தாய்,

“நோகோ யானே; நோக்கும் உள்ளம்;
அந்தீங் கிளவி ஆயமொடு கெழீஇப்
பந்துவழிப் படர்குவ ளாயினும் நொந்து, தனி
வெம்பும்மன்; அளியள் தானே”

என்று சொல்லிக் கண்ணீர் வடிக்கிறாள். இத்துணை மென்மையுடையவள் “உம்மைப் பிரியும் மன வன்மையை எவ்வாறு பெற்றாள்? தன் பிரிவால் நீவிர் வருந்தும் வருத்தத்தை அவள் எப்படி நினையாளாயினாள்? என்பன போன்ற வினாக்கள் கேட்போர் உள்ளத்தில் எழும் அன்றோ! அவற்றிற்கு விடை கூறுவாள் போல, அவள் மிக்க மென்மை யுடைய வளாகவே இதுவரை இருந்தாள்; அந்த வன்கணாளனால் (காதலனால்) இப்போது இவ்வளவு வன்மையும் ஊட்டப் பெற்று எமது துன்பத்தை நினையாமல் அக் காளையின் பின் செல்வாளாயினாள்” என்று சொல்லுவாளாய்,