பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/391

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முடிப்புரை 389



ஆனால் அவருடைய தேரிற் கட்டிய மணியின் ஓசை நள்ளிரவில் நம் ஊரின்கண் கேட்கின்றதே, இதற்கு என் செய்வேன்” என்று சொல்லுற்றாள்[1]”.

இதனைக் கேட்டுக் கொண்டிருந்தான் தலைமகன். அன்னை அறிந்தமையும், காதலியும் தோழியும் மனைக் காவலால் தன்னை வந்து காணமாட்டாமையும் எண்ணி, அவள் மனையோர், அறிவார் என்று அஞ்சி நீங்குகின்றான். நீங்குபவன், வரைந்து கோடலே இனி செய்தற்குரியதென அதற்கு வேண்டிய முயற்சியில் ஈடுபடுகின்றான்; காலம் சிறிது நீளுகிறது. அவனைச் சின்னாளாய்க் காணப் பெறாமையால் காதலியாகிய தலைகள் மனநோய் மிகுந்து மேனி வாடுகின்றாள். “சில நாள்களாய் நாம் அவரைக் காணப் பெறாமையால் அவர் வரைவிற்குரிய முயற்சி மேற்கொண்டுள்ளார் என்பது மெய்யேயாகும்; நீ அதுவரை பொறுத்திருக்க வேண்டும்” எனத் தோழி சொல்லுகிறாள். இந் நிலையில் ஒருகால் அவன் வந்து தலைவியினுடைய மனையின் சிறைப்புறமாக நிற்கின்றான்: அதனைக் கண்டுகொள்கிறான் தலைமகள். அவன் செவிப்படுமாறு தன் தோழிக்கு உரைப்பவள் போல, “தொழி, நமது வருத்தமும் கைம்மிக்கு விட்டது. மெய்யும் தீயுமிழ் தெறலின் வெய்தாயிற்று, நீ பையச் சென்று அன்னையிடம் இவளை நம் மனைமுற்றத்தில் கொண்டு கிடத்தினால் இவள் பெரிதும் நந்துவள் என்று சொல்லுக; அதனால் இந்நோயைச் செய்த தலைமகனது


  1. நற். 245.