பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/392

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

390 சேர மன்னர் வரலாறு



குறைத்து நெடிய பக்கத்திற் படிந்து வரும் காற்று என் மேனியிற் படிந்த பாலையைச் சிறிது தீண்டும்[1]” என்று சொல்லாடுகின்றாள். இதனால் தலைமகளது காதல் மிகுதியைத் தலைமகன் செவ்வையாக உணர்ந்து ஊக்கம் மிகுகின்றான்.

இவ் வண்ணம் நாள்கள் சில செல்ல, ஒரு நாள் தலைமகன் தானே தலைவிக்குத் தான் கடிதில் வரைய இருப்பதாகவும் அதுகாறும் அவள் ஆற்றியிருக்க பேண்டுமெனவும் நேரிற் கூறல் வேண்டி வருகின்றான். அவனைத் தோழி எதிர்ப்பட்டு, கருத்தறிந்து கொண்டு, “அன்ப,

“அரிய பெரிய கேண்மை ; நும்போல்
சால்பு எதிர் கொண்ட செம்மை யோரும்
தேறா நெஞ்சம் கையறுபு வாட
நீடின்று விரும்பா ராயின்
வாழதல்மற்று எவனோ? தேய்கமா தெளிவே”[2]

என்று சொல்லி அவன் கூற்றை மறுக்கின்றான்.

இதன்கண் மற்றொரு செய்தியையும் அவள் கூறாமல் கூறுகின்றாள். “நின் நாட்டுக் கழிகளில் ஆம்பல்கள் நிறையவுள்ளன. கானலில் காய்ந்த கண்டல்களின் பசுங்காய் கழன்று கழியில் வீழ்கின்றன; அதனால் மலரும் பருவத்தில் இல்லாத ஆம்பற் போதுகள் காய்களால் மோதுண்டு வாய்விரிகின்றன காண்” என்பாளாய்,


  1. நற். 236.
  2. நற். 345.