பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/394

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

392 சேர மன்னர் வரலாறு



கொண்டு வரைந்து வதுவை மணம் செய்து கொண்டு மனையறம் புரிவானாயினன்.

மனை வாழ்வில் வினை குறித்தும் பொருள் கருதியும் ஆண்மகன், மனையின் நீங்கி வேற்றூர்க்குச் செல்வது இயல்பு. அப் போதுகளில் மனைவியாகிய காதலி அவன் பிரிவாற்றாது கண்துயில் இன்றிக் கையற்று வருந்துவாள். அதனை அறியும் தோழி, “வினையே ஆடவர்க்கு உயிர்; அவர்கள் அதனை முடித்து வரும் துணையும் நீ ஆற்றியிருத்தல் வேண்டும்” என வற்புறுத்துவள். அது கேட்கும் தலைவி, ஆற்றாளாய்.

மான்அடி யன்ன கவட்டிலை அடும்பின்
தார்மணி அன்ன ஒண்பூக் கொழுதி
ஒண்டொடி மகளிர் வண்ட லயரும்
புள்ளிமிழ் பெருங்கடல் சேர்ப்பனை
உள்ளேன், தோழி, படீஇயர் என்கண்ணே[1]

என்று சொல்லுகிறாள்.

இதன்கண், யான் இதுவரையும் கடற் சேர்ப்ப னாகிய நம் காதலனை நினைந்த வண்ணம் இருந்தேன்; அதனால் என் கண்கள் உறக்கம் கொள்ளவில்லை. இனி அவனை மனத்தால் உள்ளுவதைக் கைவிடுகிறேன், என் கண்கள் உறங்குக'’ என்பாளாய், “பெருங்கடல் சேர்ப்பனை உள்ளேன், தோழி, என் கண் படீஇயர்” என்று இசைக்கின்றாள். மேலும் இதனுள் நம் சேரமான் வேறொரு பொருளையும் அமைத்துள்ளார்; ஒண்டொடி மகளிர் அடும்பின் பூக்களைக்கொழுதி வண்டல்


  1. குறுந். 243.