பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/399

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முடிப்புரை 397



களம் வஞ்சிக்குளம் எனவும், அஞ்சைக்களம் எனவும், மாக்கோதை மகோதை எனவும் மக்கள் வழக்கில் மருவத் தலைப்பட்டுவிட்டன. வஞ்சி மாநகரிடத்தே கொடுங் கோளூர் தோன்றிவிட்டது. கொடிய (வளைந்த) கடல் கொண்டவூர், கொடுங்கோளூர், முசிறித்துறைக் கடலில் மூழ்கி மறைந்தது.

இப் பெருமாக்கோதையார், சைவசமயக் குரவருள் ஒருவராகிய நம்பியாரூரர் காலத்தில் இருந்து சிவ நெறியிற் சிறந்த சேரமான் பெருமான் நாயனாராவர். இப் பெருந்தகை பாடியருளிய நூல்கள் சில சைவத் திருமுறைகளில் தொகுக்கப்பட்டிருப்பதையும் அவரது வரலாறு சேக்கிழாரால் செந்தமிழாற் பாடப்பட்டிருப் பதையும் அறியாமையால் மிக்க பிற்காலத்தே தோன்றிய கேரள மான்மியம் கேரளோற்பத்தி என்று நூல்கள் அவர் முகமதியராகி மெக்காவுக்குப் போய்விட்டார் எனப் பொய்யெழுதிவிட்டன. பிற்காலக் கல்வெட்டுகள் அவர்கள் கண்ட மகோதையை மகோதையார் பட்டினம்[1] எனச் சிறிது மாற்ற . அதன்பிறகு அது மகாதேவர் பட்டணமாக்கப்பட்டது.[2] எல்லாவற்றிற்கும் முடிவில், மகாதேவர் என்ற பெயரும் போய் மகோத்தியா பட்டினமாகி இதிகாசத்தோடு தொடர்புபடுத்திக் கூறப்படுவதாயிற்று.

டாக்டர் சேய்சு, (Dr. Sayee), ஈவிட் (Hewitt) என்பார் கூறுவது[3]போலக் கிறித்து பிறப்பதற்கு மூவாயிரம்


  1. A.R. No. 481 of 1929-30.
  2. W. Logan’s Malabar P.207.
  3. The Origin and growth of religion among the Babylonians of Dr. Sayee - Hibbert Lectures for 1887.