பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56 சேர மன்னர் வரலாறு



அவர்கட்குப் பின் யவனர் தோன்றி நம் இந்திய நாட்டோடு வாணிகம் செய்யத் தோன்றி நம் இந்திய நாட்டோடு வாணிகம் செய்யத் தலைப்பட்டனர். அவர்களில் இப்பாலசு (Hippalus) என்னும் கிரேக்கன் நம் நாட்டில் அடிக்கும் தென்மேற்குப் பருவக்காற்று நிலையையும் வடகிழக்குப் பருவக் காற்று நிலையையும் கண்டு உரைத்தான். அதன்பின் யவன வாணிகம் பெரிதும் வளம் பெற அவர்களிடையே நடைபெறுவதாயிற்று; அப் பருவக் காற்றுகளையும் அவர்கள் இப்பலசு என்றே வழங்கினர் என்பர். யவனர்கட்குப் பல்லாண்டு முன்பிருந்தே அரபிக்கடலில் அரபியரும் இந்தியரும் கலம் செலுத்தி வாணிகம் செய்து வந்தனராதலால், அவர்கள் இப் பருவக் காற்றை அறியாதிருந்தனரென நினைத்தற்குச் சிறிதும் இடமில்லை; கி.மு. ஆறாம் நூற்றாண்டில் (கி.மு. 556-539) ஆட்சி புரிந்த சால்டிய வேந்தன் நபோனிதாசு காலத்தேயே இந்தியரது கடல் வாணிகம் சிறந்து விளங்கிற்று; சிலர் கி.மு. ஏழாம் நூற்றாண்டிலேயே இந்திய நாட்டு மேலைக் கடற்கரைக்கும் மேனாட்டுக்கும் இடையே பெரு வாணிகம் நடைபெற்று என்று கூறுகின்றனர்[1]. இக் கடற் காற்றின் இயல்பறிந்து பண்டைத் தமிழ் மக்கள் கடலிற் கலஞ் செலுத்தி மேம்பட்ட செயலைப் புறப்பாட்டு[2] எடுத்துக் கூறுவது ஈண்டு நினைவு கூரத் தக்கது.

இக் காலத்தே மேனாட்டுக்குத் தென் தமிழ் நாட்டினின்று தூதொன்று சென்று யவன வேந்தரான


  1. T.V.C. Manual (Nagam Iyer) Vol. i. P 238;
  2. புறம். 66.