பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சேரநாட்டின் தொன்மை 63



ஒத்தவற்றை ஒரு திரிபுமின்றி ஏற்றுக்கொள்வது. அம் முறையில் மணி, மீன், நீர் என்பவற்றை வட மொழியில் ஏற்றுக் கொண்டுள்ளனர். பண்டைநாளைத் தொல்காப்பியரும், மொழி நடைக்கேற்ற எழுத்தால் பிறமொழிச் சொற்களை ஏற்றல் வேண்டும்; வேறு படுப்பது நேர்மையன்று என்பதற்காகவே, “வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்மே[1]” என்று தமிழ்மக்கட்கு வழி வகுத்துரைத்தார். இந்தச் சீரிய முறையை வடவர்க்கு வடமொழி யாசிரியர் வகுத்துரைக்கவில்லை போலும். நேர்மை திறம்பாத நெறிமேற்கொண்ட மேனாட்டு மொழியாளர்களும் கட்டுமரம் (Kattamaram), மிளகு தண்ணி (Molak tanni) இஞ்சி (Ginger) அரிசி (Rice) தோகை (Tugi), தேக்கு (Teak) முதலியவற்றைத் தங்கள் மொழி நடைக்கேற்பத் திருத்தி மேற்கொண்டனர். இவ்வாற்றால் வடவர் கூட்டுறவு பெற்ற சேர நாட்டவர் தம்மைக் கேரளரென்றும், தங்கள் நாட்டைக் கேரள நாடென்றும் வடவர் வழங்கியவாறே[2] வழங்குவாராயினர். இன்றும், தென்னாட்டவருள், தமிழரொழியப் பிறரனைவரும் தங்களை வடவரிட்ட பெயராலே வழங்குவது குறிக்கத்தக்கது.

இனி, சேர நாட்டுச் சேரலர், தம்மைக் கேரளரென வழங்கத் தலைப்பட்ட காலம் தமிழ் மொழி சிதைந்து மலையாளமாக மாறி காலம்; சேரநாடென்றும்


  1. தொல், சொல், எச்ச:5;
  2. காத்தியாயனர், பதஞ்சலி முதலியோர் கேரளரென வழங்கியுள்ளனர்.