பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சேரர்கள் 71



பெற்ற தென்பது மட்டில் தெளிவாகும்[1]” என்பர். வானவரென்ற பெயர் சீன நாட்டவர்க்கு இன்றும் வழங்கி வருவதால், சேரர், ஆதியில் சீன தேசத்திலிருந்து வந்தவர் எனத் திரு. கனகசபைப் பிள்ளையவர்கள் கூறுகின்றார். வானவரம்பன் என்பது வானவர் அன்பன் என்ற இரு சொற்களாலாகிய ஒரு தொடரென்றும், அது திரிந்து வானவரம்பன் என வழங்குவதாயிற்றென்றும், இது, “தேவானாம் பிரியா” என அசோக மன்னனுக்கு வழங்கும் சிறப்புப் போல்வதென்றும் சிலர் கருது கின்றனர். வானம் என்பது கடலுக்கொரு பெயரென்றும், அதனால் வானவரம்பன் என்றது கடலை எல்லையாக உடையவன் என்று பொருள்படும் என்றும் வேறு சிலர் கூறுவர். மற்றும் சிலர் வானமும் நிலமும் தொடும் இடத்தை எல்லையாக வுடையவன் வானவரம்பன் என்பர். பிற்கால மலையாள நாட்டு அறிஞர்கள் வானவரம்பன் என்பதைப் பாணவன்மன் எனத் திரித்துக் கொள்வர். இங்கே கூறிய பொருள்களுள் “தேவானாம் பிரியா” என்ற தொடர் “தடித்த முட்டாள்” என்னும் பொருள் படத் துறவிகளை வைதுரைக்கும் வைதிக மொழியுமாகலின்[2], வசை மொழியைச் சேரர் தமக்குச் சிறப்புப் பெயராகக் கொண்டனர் என்பது பொருந்தாது என்பர் கே.ஜி. சேஷையர் அவர்கள். ஏனையவற்றின் பொருந்தாமையை ஈண்டு விரிக்க வேண்டுவதில்லை. இனி, வானவன் என்பது வான மலையை யுடையவன் என்றும், வானவரம்பன் என்பது


  1. மு. இராகவையங்கார்: சேரன் செங்குட்டுவன்.
  2. Madras Discourses of Sri Sankaracharya P. 147, 163.