பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சேரர்கள் 79


சோழ நாட்டுக்கு உறையூரும் பாண்டி நாட்டுக்கு மதுரையும் போலச் சேர நாட்டிற்கு வஞ்சி மாநகர் தலைநகரமாகும். பாண்டி நாட்டுக்குக் கொற்கையும் சோழ நாட்டிற்குக் காவிரிப்பூம்பட்டினமும் போலச் சேரநாட்டுக்கு முசிறியும் தொண்டியும் கடற்கரை நகரங்களாக விளங்கின. காவிரி கடலோடு கலக்கு மிடத்தே காவிரிப்பூம்பட்டினமும், தண்ணான் பொருநை கடலோடு கூடுமிடத்தே கொற்கையும் போலப் பெரியாற்றின் கிளையாகிய சுள்ளியாறு கடலோடு கூடுமிடத்தே முசிறி நகர் இருந்தது. இதனை மேனாட்டு யவனர்களான பெரிபுளுசு ஆசிரியரும் பிளினியென்பாரும் தங்கள் குறிப்பில் குறித்திருக் கின்றனர். இந் நகரின் பகுதியாய் இதற்குக் கிழக்கில் இருந்தது வஞ்சிநகர்; வஞ்சிக்கு வடமேற்கிலும் முசிறிக்கு நேர் வடக்கிலும் ஏழு எட்டுக் கல் தொலைவில் கருவூர் நகரம் இருந்தது.

தொண்டி நகர் குட நாட்டில் கடற்கரையில் இருந்ததொரு நகரம். குட்ட நாட்டுக்கு வஞ்சிபோலக் குடநாட்டுக்குத் தொண்டி சிறந்து நின்றது. குடநாடு பொறை நாடு என்றும் குடநாடு என்றும் பிரிந்தபோது தொண்டி பொறை நாட்டில் அடங்கிற்று. இப்போது அது சிற்றூராய்க் குறும்பொறை நாடு வட்டத்தில் உளது. குடநாட்டுக்கு நறவூர் என்றோர் ஊர் தலைநகராய் விளங்கிற்று; இப்போது அது குடநாட்டில் நறவுக்கல் பெட்டாவில் உள்ளது.

தொண்டிநகர் கடற்கரையில் இருந்தமையின் யவனர்கட்கு அது நன்கு தெரிந்திருந்தது. இது மிக்க