பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82 சேர மன்னர் வரலாறு



என்பது வஞ்சிநகர்க்கு இடைக்காலத்து உண்டாகி வழங்கிய பெயர். மலைநாட்டுக் கொடுங்கோளூர்[1] என்று கல்வெட்டுகள் கூறுவது காண்க. அதன் ஒருபகுதியான வஞ்சிக்களம், அஞ்சைக்களம்[2] என்றும், வஞ்சிக்குள[3] மென்றும் வழங்குவதாயிற்று. இதனால் வஞ்சிநகர் கடற்கரைத் துறைமுகமாகவும் விளங்கியது காணலாம். வஞ்சி முற்றத்தேயிருக்கும் காயல் கடலொடு கூடும் கூடல் வாயின் தென்கரையில் முசிறியும், வடகரையில் ஆறு ஏழு கல் தொலையில் கருவூரும் இருந்தன. கருவூர் இப்போது கருவூர்ப் பட்டினமென வழங்குகிறது. இவற்றின் இடையே காயலின் கீழ்ப் பகுதியில் பேரி யாற்றின் கிளைகளுள் ஒன்றான சுள்ளியாறு வந்து . கலக்கின்றது. தென்மேற்கில் முசிறி நகரும் வடமேற்கில் கருவூரும் தன்கண் அடங்க இடையிற் கிடந்த காயற் குட்டத்தை நாவாய்க்குளமாக (Harbour)க் கொண்டு வஞ்சி மாநகர் விரிந்த பண்புடன் விளங்கினமை இதனால் இனிது பெறப்படும். இது பற்றியே சான்றோர், ஏனை உறையூர் மதுரை என்ற நகர்களோடு ஒப்பவைத்து இவ் வஞ்சி நகரைச் சிறப்பித்து, “சேரலர்... வளங்கெழு முசிறி[4]” எனவும், “பொலந்தார்க் குட்டுவன் முழங்கு கடல் முழுவின் முசிறி[5]” எனவும் பாடியுள்ளனர். மேலை நாட்டு யவனருடைய கலங்கள் நேரே வருங்கால் முதற்கண் முசிறித் துறைக்கு வரும் என்றும், அத் துறையில் கலங்கள் கடலில் மிக்க தொலையில் நிற்கும்


  1. A. R. No 313. of 1906.
  2. சுந். தேவா
  3. S.I.I. Vol V. No. 528.
  4. அகம். 149.
  5. புறம். 343.