பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88 சேர மன்னர் வரலாறு



இவ் உதியன் காலத்தில் வேணாட்டில் வெளியன் என்னும் வேளிர் தலைவன் வாழ்ந்து வந்தான். அவனுடைய மகள் வேண்மாள் என்பவளை உதியன் மணந்து கொண்டான்; இத் திருமணத்தின் பயனாக உதியஞ்சேரலுக்கு மக்கள் இருவர் தோன்றினர். முன்ன வனுக்கு நெடுஞ்சேரலாதன் என்றும் பின்னவனுக்குக் குட்டுவன் என்றும் பெயரிட்டான். இருவரும் அரசர்க்கு வேண்டப்படும் கலைப்லவும் இளமையிலேயே நன்கு பயின்று வந்தனர்.

முடிவேந்தர்க்கு மகட்கொடை வழங்கும் முறைமை தமிழகத்தே வேளிர்பால் இருந்தமையின், அவ் வேளிர்களைத் தங்கள் நாட்டை யடுத்துள்ள பகுதிகளில் இருந்து வருமாறு செய்வது பண்டை வேந்தர் மரபு. பாண்டி நாட்டை அடுத்துள்ள பறம்புநாட்டிலும், சோழ நாட்டை அடுத்துள்ள கொல்லி நாட்டிலும், தொண்டை நாட்டை அடுத்துள்ள மலையமான் நாட்டிலும், பிறவிடங்களிலும் வேளிர்கள் இருந்து வந்தமை சங்க இலக்கியம் பயில்வோர் நன்கறிந்தது இவ்வாறே சேரமன்னர்கள் தெற்கில் ஒரு வேணாடு கொண்டது போல் வடக்கில் வானவாசி நாட்டிடையே ஒரு வேணாட்டைக் கொண்டனர். அவ் வேணாடு இடைக்காலத்தே வேளகமாயிருந்து இப்போது பெல்காம் (Belgaum) என வழங்குகிறது. மேலும், மகட் கொடை வழங்கும் வேளிர் தங்கள் நாட்டை அடுத்திருந்து, தமிழ் வேந்தர்க்கு ஒரு சிறந்த அரணாகவும் விளங்கிற்று. “பெண்ணைக் கொடுத்தோமோ கண்ணைக் கொடுத்தோமோ” என்பது தமிழரிடை நிலவும் பழ