பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/98

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96 சேர மன்னர் வரலாறு



இனி, அவர்கள் கூறுமாறு பாண்டவ கெளரவர் செய்து கொண்ட போரைத் “தென்னாட்டில் ஒரு மூலையில் வாழும் ஒரு தமிழ் வேந்தன் பாராட்டி, அப்போரில் இறந்தோர் பொருட்டுப் பெருஞ்சோற்று விழாவைத் தன்னாட்டில் செய்தற்கு ஒரு தொடர்பும் இல்லை; அந்நாளில் வடவாரியர்க்கும் தென் தமிழர்க்கும் சிறந்த நட்புரிமை இருந்ததாக எண்ணு தற்கும் இடமில்லை ; வடவாரியர் பிணங்கியதும் அவரைத் தென்னாட்டுத் தமிழர் “அலறத்தாக்கி[1]” வென்றதுமே சங்க இலக்கியங்களுள் பேசப்படுகின்றன. “பேரிசை மரபின் ஆரியர் வணக்கி[2]” “ஆரிய வண்ணலை வீட்டி[3]” “ஆரியவரசர் கடும்பகை மாக்களைக் கொன்று[4]” என்றெல்லாம் சங்கநூல்கள் கூறுவதைக் காணும் கின்றோம். அதுவே அவர் பொருட்டுச் சேரலாதன் விழாச் செய்திருக்கலாம் என அவர்கள் கூறுவது பொருந்தாது என்பது தெளிவாகிறது.

இனி, தென்னாட்டு ஊர்களில் பாரதம் படிப்பதும்[5] குறித்துத் தென்னாட்டுச் செல்வர்கள் பாரத விருத்தியென[6] நிவந்தங்கள் விடுவதும் இடைக்காலத்தும் பிற்காலத்தும் நடந்தன. சங்ககாலத்தே இந்நிகழ்ச்சிகள் நடந்தன என்று கொள்வதற்குச் சங்க நூல்களில் ஆதரவு சிறிதும் இல்லை.

இனி, சாக்கைக் கூத்து வகையில் அவிநயக் கூத்தின் விளைவாக நிலவும் கதகளி என்னும் கூத்தில் இறுதி


  1. அகம்.396.
  2. பதிற். ii.பதி.
  3. ஷை (மேலது) V. பதி.
  4. சிலப். கால்கோள். 211.
  5. A.R. No. 540 of 1922.
  6. Annual Report of Mad. Epigraphy for 1910. p.96.