பக்கம்:சேரர் தாயமுறை.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மதப்புரைகள். சென்னைச் சட்டசபைச் செக்ரட்டரி திருவாளர் திவான்பகதூர் R. V. கிருஷ்ண ஐயரவர்கள் B. A., M.L' எழுதியது. (ஆங்கிலக்கடித மொழிபெயர்ப்பு.) அன்புமிக்க பாரதியாரே! சேர அரசர் தாய முறையைப்பற்றிய தங்கள் மிக இனி, ட்டுரையை முழுவதும் படித்துப்பார்த்தேன். சேர அரசருள மருமக்கட்டாய முறை யுண்பை:யைச் சங்க நூல்கள் ஆதரிப்பன என்றேயான் எஞ்ஞான்றும் எண்ணினேன். தங்கள் கட்டுரையில் 5-ஆம் பக்கத்து 4-ஆவது பிரிவில் தங்களாலும் காட்டப்படும் சொற் றொடரைத் திரு. எம். ஸ்ரீநிவாஸ ஐ.பங்கார் தம் 'தமிழ் ஆராய்ச்சிகள்' என்ற நாலுள் 273-ஆம்பக்கத்தில் மணக்கிள்ளியை நெடுஞ்சேரலின் உடன்பிறந்தாட்குக் கணவனாகவே கொண்டு விளக்கியுள்ளார். திரு. பி. டி. ஸ்ரீரிவாஸ ஐயங்கார் தம் 'தமிழ்ச்சாகம்' என்ற நூலுள் 512-ஆம் பக்கத்தில் இக்கருக்கொடு மாறுபடக்கூறினாரெனினும், அவர்கூற்று வலியற்றதென நான் கருதலானேன். சோவசசர்வழியில் மருமக்கட்டாயத்தை ஆகரிக்கச் சங்க நூல்களில் இவ்வளவு பொதி நிதி போன்ற செய்திகளிருப்பதை நான் முன் அறியேன். இவ்வெல்லாச் சான்றுகளையும் திரட்டிக் தாங்கள் ஒரு கட்டுரையாக வெளியிட்டது. தமிழகத்திற்கு ஒரு பெரும்பணி இயற்றின தாகும். மருமக்கட் டாயமுறையானது மக்கட்டாயக்குடி.களின் மேல் புதிதாகச் சுமத்தப் பட்டதென்னும் கொள்கை அதனளவில் முதன்முகத்தே நிலை அவ தன்றாம். மக்களின் முற்போக்குமுறையில் தந்தைவழிக்குடி னின்றும் தாய்வழித்தாயகிலை ஏற்படுவது எஞ்ஞான்றும் இல்லை யாகும். தென்னாட்டில் வந்தேறிய ஆரியர் (தந்தைவழி) :கரீகம் இப் பழைய தாய்வழித் திராவிடநாகரிகமுறையை மேலைக் கடற் புறத்தே ஒதுக்கியதென்பதும், அக் குட கடலடைகரைக் கேரளநாட்டி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சேரர்_தாயமுறை.pdf/13&oldid=1444482" இலிருந்து மீள்விக்கப்பட்டது