பக்கம்:சேரர் தாயமுறை.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பாராட்டு முன்னுகா . அதனை ஒப்பவாகிலும், பதில் ஆசிரியரது கருத்தை விளக்குதற்குரிய சிறந்தசொல் வேறொன்று தமிழ்மொழியில் இல்லை. அரசுரிமைத் தந்தையான அம்மான்பால் தன் தாய்வழியாசினை உரிமையிற் பெறும் அரசுரிமைப் புத்திரனாகிய மருமானைக் குறிக்க மகன் என்ற சொல்லை வழங்கிய பதிக ஆசிரியர், 'ஞானபிதா' 'நானபுத்திரன்' என்னும் வழக்கினை உளத்துக் கொண்டார் போலும், கைவல்யதவ ரீதம் தச்!: விளக்கப்படலம் 19-ஆய். செய்யுளில் நான் குரு தன் மாணா 'வாராய் என் மகனே!' என்று விளித்தல் ஈண்டு நோக்கற்பாது. (ஆங்கிலத்தில் உப்பம்.) வெ. ப. சுப்பிரமணியமுதலியார், வெள்ளகால், திருநெல்வேலி ஜில்லா. 26-1-35. பாராட்டு முன்னுரை. சென்லச் சர்வகலாசாலைத் தமிழ்ப் பேரகராதிக் கலைமைப் பதிப்பாசிரியர், திரு. S. வையாபுரிப்பிள்ளையவர்கள் B.A., B. I எழுதியது. சிறந்த தமிழறிஞரும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துத்தமிழ்ப் பேராசிரியருமாகிய திரு. சோமசுந்தரபாரதியாரவர்கள் எழுதி வெளி யிடும் இந்நாலுக்குப் பிறரொருவரது முன்னுரையொன்று வேண்டு மென யான் கரு.க மாட்டேன். 1929-ஆம் வருஷத்திலே பாரதியா ரவர்களின் வாசஸ்தானமாகிய பசுமலைக்கு யானும் எனது நண்ப ரொருவரும் சென்றிருந்தோம். அப்பொழுது சோர்தாய முறை யைக்குறித்து அவர்கள் ஆங்கிலத்தில் எழுதியிருந்த கட்டுரையிற் சிலபாகங்களை எங்களுக்கு வாசித்துக்காட்டினார்கள். அவர்களுடைய ஆராய்ச்சித்திறத்தினைப் பெரிதும் வியந்து, அக் கட்டுரையினைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சேரர்_தாயமுறை.pdf/21&oldid=1444748" இலிருந்து மீள்விக்கப்பட்டது