பக்கம்:சேரர் தாயமுறை.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பகுதி ங. சங்கநூற்சான்றுகள் இவ்வாராய்ச்சிக்குத் துணையாகும் சான்றுகள் பல. அவற்றுள், சங்க, நால்கள் சிறந்தன. அவற்றுள்ளும் பதிற்றுப்பத்தே கக்சிறந்தது. சோலரச் சோழபாண்டியருடன் சேர்த்துப்பாடும் பிறநால்கள் போலாது, இது முழுதும் தனியே சேரரையே பாராட்டுவதாகும். பத்துப் பழம்பெரும்புலவர் ஒவ்வொரு சோனையும் பப்பத்துப்பாட் டிற் பாராட்டிப்பாடிய பாக்களைத் தொகுத்துப் பதிற்றுப்பத்து எனு! பெயரால் நின்று நிலவ வைக்கப்பெற்றதொரு தொகை நால் இது. இதில் முதற்பத்தும் இறுதிப்பத்தும் கிடையாமல் இடை யெட்டுப் பத்துப் பாட்டுக்கள் மட்டுமே வெளிவந்துள்ளன. இவற்றின் ஒவ் வொரு பத்துப்பாட்டின் தொகையிறுதியில் அப்பாட்டுடைக் கோச் சேரனின் குடிவழியும் அவன் வெற்றி முதலிய சில பிரசிறப்புக்கள அடங்கிய பதிகமொன்று சேர்க்கப்பட்டிருக்கிறது ஆகவே சேரர் குலமுறை தெளிவதற்கு இப்பதிகங்கள் மிகவும் உபகாரப்படும். இப் பதிகப்பாட்டுக்களில் சோர்குடி.வழிகூறும் அடிகளையும் தொடர்களை யும் ஆதரவாகக்கொண்டே பண்டி தர்பலரும் இதுகாறும் இச்சோர் குலமுறை கிளத்தியுள்ளனர். அகனால் ஈண்டு அவ்வடிகளையும் தொடர்களையுமே முசலில் நாம் ஊன்றி காக்கி அவற்றின் பொருளும் குறிப்பும் ஆழச் சூழ்ந்து தெளியக்கடவோம். அவை வருமாறு;--- 1. முதற்பத்து - முற்றுமே அகப்பட்டிலது. 2. இரண்டாம்பத்து:- இமையவரம்பன் நெடுஞ்சேரலா காணக் குமட்டூர்க் கண்ணனார் பாடியது. "மன்னிய பெரும்புகழ் மருவில் வாய்மொழி இன்னிசை முரசின் உதியஞ் சோற்கு, வெளியன் வேண்மான் நல்லினி பான் நமகன்" 3. மூன்றாம்பத்து - பல்யானைச் செல்கெழுகுட்டுவனைப் பாலைக் கௌதமனார் பாடியது. இமைய வரம்பன் தம்பி............. பல்யானை செல்கெழுகுட்டுவனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சேரர்_தாயமுறை.pdf/29&oldid=1444768" இலிருந்து மீள்விக்கப்பட்டது