பக்கம்:சேரர் தாயமுறை.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

26 சோர்தாயழறை, யெல்லாம் மேலே விசாரித்தோம். பதிகம் பாடிய பழம்புலவர் பிழைத்தனரென்று அவர்பாக்களை எளிதிற் கழித்தற்கில்லை. என்றாலும் இளங்கோவடிகளின் சொற்றொடர் மக்கட்டாயத்தை மட்டுமே சுட்டுமாயின், அவரையே தழுவிப் பதிகப்பாவலரை நழுவவிடவேண்டி வரும். ஆனால், அப்படி, நழுவவிடு முன், அவர் பதிகத்தொடரும் இனங்கோவடிகள் சொற்றொடரும் தம்முள் மாறுபடாமல் நின்றமையும் பொருளமைதி பெறக்கூடுமா என்று விசாரிப்பது நமது முதற்கடமை. “பெரும்புலவர் சொல்லாற்றல் மெய்ம்மை பிறழாமற் காக்கும்” என்னும் மாபுண் மையை மறவாமல், முதலில் இவற்றை அமைத்துக்கொள்ளும் முயற்சியை நாம் மேற் கொள்வதே முறையாகும். எவ்வாற்றானும் அமைதிபெற வழி காணாதவரை, இவற்றுட் சிறந்தது கொண்டு பிறவற்றைக் கழிப்பது இழுக்காகாது. இம்முறையை இங்கு நாம் மேற்கொண்டு, அடிக ளுடையவும், அவரைப்பற்றியெழும் அடியார்க்குகல்லாருடையவு மான சொற்றொடர்களைச் சிறிது ஊன்றி ஆராயப்பு:குவோம். (c) இந்நெருக்கடியில், இவ்வாராய்ச்சிக்கு உதவியாக, எதிர் பாராத இடத்திலிருந்து நமது ஐய இருளகற்றவரும் விளக்கத்தைப் பெறுகின்றோம். சங்கப்புலவரான சாத்தனார், செங்குட்டுவன் - இளங் கோவடிகள் இருவருக்கும் சமகாலத்தவர்; அதுமட்டுமில்லை. அவ் விருவர்பழக்கமும் நட்பும் பெற்றவராவர். மாபத்தினியின் மறக்கற் பால் மதுரை அழலுண்டழிந்தபிறகு இவர் சேரநாடு சென்று வஞ்சி யிற் கோச் சேரன்வண்மையும் இளக்கோவின் மதிப்பும் பெற்று வாழ்ந்துவந்தார். அக்காலத்தில் இவர் மணிமேகலை நூலை இளக் கோவுக்குப் பாடிக் காட்டியும், அடிகளின் சிலப்பதிகாரத்தை அவர் பாடக்கேட்டும், ஒருவர் நாலையொருவர் பாராட்டியதாகத் தெரிகின் றோம். அடிகளின் அங்கீகாரச்சிறப்புடைய பல மேகலையுள் "மகர்” எனும் சொல் 'மனை தி” எனும் பொருளில் வழக்கப் பார்க்கின்றோம். "இனக்கிவன் மகனத் தோன்றிய தடம் மனக்கினி யாற்கும் மகளாய தூஉம் பண்டும் பண்டும் பலபிறப் புளலால்" (மணிமேகலை. காதை 22. வரி 29-31.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சேரர்_தாயமுறை.pdf/50&oldid=1444791" இலிருந்து மீள்விக்கப்பட்டது